அரசு பள்ளியில் படித்தாலும் உயர்ந்த நிலைக்கு வரலாம் இஸ்ரோ தலைவர் சிவன் பேச்சு

நாகர்கோவிலில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட இஸ்ரோ தலைவர் சிவன் பேசியதாவது:

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. நமது தொழில்நுட்பத்தை பிற நாடுகள் கடன் வாங்கும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். இஸ்ரோ கண்டுபிடித்துள்ள நேவிக் கருவியை தமிழக மீனவர்களுக்காக அரசு பயன்படுத்த வேண்டும்.  பிரதமரின் முயற்சியால் நவீன தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் 158 திட்டங்கள் தயாராகி வருகின்றன. ஏழை மக்கள் நலனை கருதி இஸ்ரோ செயல்படுகிறது. அரசு பள்ளியில் படித்தாலும் உயர்ந்த நிலைக்கு வரலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Share this