NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்:பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், நல்லாசிரியர் விருதுக்கு ஜூன் 15-ம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ம் தேதி முன்னாள்குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்கி கவுரப்படுத்தி வருகிறது.
அதன்படி 2018-ம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதைப் பெற தகுதியான ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என கடந்த மே 16-ம் தேதி மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.இதுதவிர ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அந்த சுற்றறிக்கையில், ‘‘தேசிய நல்லாசிரியர்விருது -2018 பெற தகுதியான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஜூன்15-ம் தேதிக்குள் www.mhrd.gov.in இணையதளத்தில் நேரிடையாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வரை பணியாற்றி இருக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களும், கல்விஅலுவலகங்களில் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களும் விண்ணப்பிக்கக்கூடாது.

மனிதவள மேம்பாட்டுத்துறை இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றியே விண்ணப்பிக்க வேண்டும். இதுவரைவிண்ணப்பிக்காத ஆசிரியர்கள் ஜூன் 15-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive