Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் அமைகிறது 15வது மாநகராட்சி : ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!

ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, 14 மாநகராட்சிகள் உள்ள நிலையில் 15-வது மாநகராட்சியாக ஆவடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆவடியை மாநகராட்சியாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில், திருச்சி, சென்னை, சேலம், மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ளன. அதில், கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஓசூர், நாகர்கோவில் ஆகிய இரு நகரங்களும் புதிய மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவசர சட்டமாக ஆளுநர் ஒப்புதல் தெரிவித்து ஆவடியை மாநகராட்சியாக அறிவிப்பதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த அறிவிப்பாணை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அரசாணையில் ஒரு நகரை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டன.

மேலும் தற்போது ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதன் மூலம் அங்கு ஒரு மேயர், ஒரு கவுன்சில், ஒரு நிலைக்குழு, வார்டு கமிட்டி குழு, மற்றும் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரங்களை கொண்டு ஆவடி மாநகராட்சி வடிவமைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பழங்குடியினர், எஸ்சி.,எஸ்.டி., தொகுதிகள் 50% குறையாமல் மாநகராட்சி வார்டுகள் பிரிக்கப்படும் எனவும், மேலும் மகளிருக்கான வார்டு எண்ணிக்கை 50% குறையாமல் அமைக்கப்படவேண்டும் என்ற விவரங்கள் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சியாக எந்தெந்த பகுதிகள் சேர்த்துக்கொள்ளப்படலாம் என்பது குறித்த விவரங்கள் நகராட்சி கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, நெமிலிச்சேரி, நசரத்பேட்டை, காட்டுப்பாக்கம், ஐயப்பாக்கம் உள்ளிட்ட 11 கிராம பஞ்சாயத்துக்கள் ஆவடி மாநகராட்சியில் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆவடி மாநகராட்சியானது மொத்த பரப்பளவாக 148 சதுர கி.மீ பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆவடி மாநகராட்சியில் 80 முதல் 100 வார்டுகள் வரை பிரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆவடி மாநகராட்சியாக மாற்றப்படும் நிலையில், அதன் அடிப்படை வசதிகள் மேலும் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive