++ இன்ஜி., சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு ஒரு மாணவி, 2 மாணவர்கள் '200க்கு 200' ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
 இன்ஜி., சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு ஒரு மாணவி, 2 மாணவர்கள் '200க்கு 200'
சென்னை இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை தமிழக உயர்கல்வித்துறை நேற்று வெளியிட்டது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் படித்த இரண்டு மாணவர்கள் 200க்கு 200 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பி.இ. - பி.டெக். படிப்பில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு உயர்கல்வித்துறை சார்பில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க 1.33 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
அவர்களில் சரியான தகவல்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்த ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 145 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். அதில் ஒரு லட்சத்து 4406 பேர் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.
இதையடுத்து தகுதியான மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் நேற்று வெளியிட்டார். அதில் ஒரு லட்சத்து 3150 பேர் பெயர் விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
* முதல் 10 இடங்களில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் படித்த அரவிந்த் மற்றும் ஹரிஷ் பிரபு; ஆந்திர பாட திட்டத்தில் படித்த தமிழக மாணவி பிரதிபா செந்தில் 200க்கு 200 கட் - ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் இரண்டு பேர் 199.5 மதிப்பெண் பெற்றுள்ளனர்
* விளையாட்டு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
* கட் - ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் பொது தரவரிசை மற்றும் ஜாதி வாரியான தரவரிசை பட்டியல் மாணவர்களின் அலைபேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். ஆக அனுப்பப்பட்டுள்ளது
* தற்போதைய நிலையில் 479 கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுடன் சில கல்லுாரிகள் தங்களின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் கவுன்சிலிங் வழியாக நிரப்ப முன் வந்துள்ளன. அந்த வகையில் 29 ஆயிரத்து 342 இடங்கள் கூடுதல் இடங்களாக சேர்க்கப்பட்டுள்ளன
* அதன்படி மொத்தம் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்கள் கவுன்சிலிங்குக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி கவுன்சிலிங்குக்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை விட 69 ஆயிரத்து 790 இடங்கள் அதிகமாக உள்ளன. அதனால் 70 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என்பது தற்போதே உறுதியாகி விட்டது
* தரவரிசை பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை முதன்மை செயலர் மங்கத்ராம் சர்மா தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர் விவேகானந்தன் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
25ம் தேதி கவுன்சிலிங் துவக்கம்
இன்ஜினியரிங் படிப்புக்கான தரவரிசை வெளியாகியுள்ள நிலையில் வரும் 25ம் தேதி கவுன்சிலிங் துவங்க உள்ளது. முதலில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் பின் முன்னாள் ராணுவ வீரர்கள் அதன்பின் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 3ல் கவுன்சிலிங் துவங்க உள்ளது. ஒவ்வொரு மாணவருக்குமான கவுன்சிலிங் தேதி மற்றும் விருப்ப பதிவு விபரங்கள் அவரவர் அலைபேசி 
எண்ணுக்கும் கவுன்சிலிங் கமிட்டி சார்பில் அனுப்பப்படும் என உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
'தண்ணீர் பிரச்னையால்
வகுப்புகள் பாதிக்காது'
இன்ஜினியரிங் கல்லுாரிகள் அண்ணா பல்கலை உள்ளிட்ட கல்லுாரிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இருந்தால் அதை சமாளிப்போம். எனவே கல்லுாரிகளின் விடுதிகளை திறப்பதிலும் அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் வகுப்புகளை துவங்குவதிலும் எந்த பாதிப்பும் இருக்காது. சென்னை மாநில கல்லுாரியின் விக்டோரியா மாணவர் விடுதி வரும் 24ம் தேதி முதல்வரால் திறக்கப்பட உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் இந்தாண்டு அமலுக்கு வராது. கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் விருப்ப பதிவில் எத்தனை கல்லுாரிகளை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். தங்களுக்கு தேவையான கல்லுாரிகளை முன்னுரிமை கொடுத்து வரிசையாக பதிவு செய்யலாம். அவர்கள் பதிவு செய்த வரிசைப்படி எந்த கல்லுாரியில் இடம் உள்ளதோ அந்த இடம் ஒதுக்கப்படும்.
அன்பழகன்
உயர்கல்வித்துறை அமைச்சர்
கல்லுாரி இடங்கள் விபரம்
கல்லுாரி வகை அனுமதிக்கப்பட்ட இடங்கள் கவுன்சிலிங் இடங்கள்
அரசு, அரசு உதவி 13 6,720 6,137
அண்ணா பல்கலை கல்லுாரிகள் 19 8,840 8,840
அண்ணாமலை பல்கலை 1 1,140 1,116
மத்திய அரசு கல்லுாரிகள் 3 220 185
சுயநிதி கல்லுாரிகள் 350 1,57,385 1,22,987
சிறுபான்மை கல்லுாரிகள் 93 50,039 33,675
மொத்தம் 479 2,24,344 1,72,940

1 comment:

Dear Reader,

Enter Your Comments Here...