தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில்
தொகுப்பூதிய அடிப் படையில் பணியாற்ற 2,345 செவிலி யர்களை தேர்ந்தெடுப்பதற்கான எழுத்து தேர்வு 69 மையங்களில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையில் தொகுப்பூதி யத்தில் ஒப்பந்த அடிப்படையில் 2,345 செவிலியர்களை (பெண், ஆண்) நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. செவிலியர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு மூலம் செவிலியர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும், பிஎஸ்சி நர்சிங் மற்றும் டிப்ளமோ நர்சிங் படித்தவர்கள் விண்ணப் பிக்கலாம் என்று தேர்வாணையம் தெரிவித்திருந்தது. தமிழகம் முழு வதும் இருந்து 62,839 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித் திருந்தனர். இந்நிலையில் 2,345 செவிலி யர்களை தேர்ந்தெடுப்பதற்கான எழுத்துத் தேர்வு சென்னை, திருச்சி, மதுரை கோவை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் 69 மையங்களில் நேற்று நடை பெற்றது. சென்னையில் மட்டும் 11 மையங்களில் தேர்வு நடந்தது. காலை 10 மணி முதல் பகல் 12.30 மணிவரை நடைபெற்ற தேர் வில் விண்ணப்பித்திருந்தவர்களில் சுமார் 90 சதவீதத்துக்கும் அதிக மானோர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப் பட உள்ளது. பின்னர், சான்றிதழ் சரிப்பார்ப்பு நடைபெறும். இதையடுத்து, தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவ மனையில் சுமார் 15 ஆயிரம் அரசு செவிலியர்கள் பணியாற் றுகின்றனர். இவைதவிர தொகுப் பூதிய அடிப்படையில் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தற்போது தொகுப் பூதிய அடிப்படையில் 2,345 செவிலியர்கள் நியமனம் செய்யப் பட உள்ளனர். அரசு மருத்துவ மனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்றவாறு தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments