தலைமை செயலகத்திற்கு, நேற்று, குடிநீர் லாரி வர தாமதமானதால், ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.சென்னையில் உள்ள, தலைமை செயலகத்தில், 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து, லாரிகளில் குடிநீர் எடுத்து வரப்பட்டு, குழாய்கள் வழியே வினியோகம் செய்யப்படுகிறது. மற்ற தேவைகளுக்கு, ஆழ்துளை கிணறுகளிலிருந்து பெறப்படும் தண்ணீர் வழங்கப்படுகிறது.நேற்று காலை, குடிநீர் லாரிகள் வர தாமதமானது. இதனால், குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. 
ஊழியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். அதைத் தொடர்ந்து, உயர் அதிகாரிகள், குடிநீர் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். விரைவாக தண்ணீர் அனுப்பும்படி தெரிவித்தனர். மதியம் குடிநீர் லாரி வந்தது. அதன்பின், தண்ணீர் பிரச்னை தீர்ந்தது. ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments