சென்னை, முதுநிலை படிப்புக்கான, 'டான்செட்' நுழைவு தேர்வுக்கு, உதவி எண்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன.பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., பட்டப் படிப்பு
முடித்தவர்கள், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., உள்ளிட்ட முதுநிலை
படிப்பில் சேர, தமிழக அரசின் சார்பில், 'டான்செட்' நுழைவு தேர்வு
நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, நாளை மறுநாள் மற்றும் 23ம் தேதிகளில்
நடக்கிறது. இந்த தேர்வை, 30 ஆயிரம் பேர் வரை எழுத உள்ளனர்.தேர்வு குறித்து,
சந்தேகங்கள் இருந்தால், நிவர்த்தி செய்ய, சென்னை, அண்ணா பல்கலையில், உதவி
மையம் அமைக்கப்பட்டுள்ளது. 'தேர்வர்கள், 044 - 2235 8314; 2235 8289
மற்றும் 2235 8293 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என, டான்செட்
கமிட்டி செயலர், ஈஸ்வரகுமார் அறிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...