பொறியியல் படிப்புக்கு இன்று ரேண்டம் எண்: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள
ஒரு லட்சத்து 33 ஆயிரம்மாணவர்ளுக்கு ஆன்லைனில் இன்று ரேண்டம் எண் ஒதுக்கப் படுகிறது.தமிழ்நாட்டில் 539 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இதில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில் சேருவதற்கானஆன்லைன் பதிவு மே 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, மாணவர்களுக்கு ரேண்டம் எண் (சமவாய்ப்பு எண்) இன்றுஆன்லைனில் ஒதுக்கீடுசெய்யப்படுகிறது. ரேண்டம் எண் என்பது கணினியால் ஒதுக்கப்படும் 10 இலக்க எண் ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும் பட்சத்தில் யாரைமுதலில் கலந்தாய்வுக்கு அழைப்பது என்பதை முடிவுசெய்யும் கடைசி வாய்ப்பாக இருப்பது ரேண்டம் எண் ஆகும்.
ஒரே கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களை கலந்தாய்வுக்கு அழைக்க முன்னுரிமை வழங்கும்போது, முதலில், அந்தமாணவர்களின், கணித மதிப்பெண்கணக்கிடப்படும்.இரண்டாவதாக, இயற்பியல் மதிப்பெண்ணும், மூன்றாவதாக, மாணவர்களின் பாடப்பிரிவில் நான்காவது பாடத்தின் மதிப்பெண் கணக்கிடப்படும். ஒருவேளை அதுவும் ஒரே மாதிரியாக இருக்கும் பட்சத்தில், மாணவர்களின் பிறந்த தேதி ஒப்பிட்டு பார்க்கப்படும். எதிர்பாராதவிதமாக பிறந்த தேதியும் ஒன்றுபோல் இருந்தால், கடைசியாக ரேண்டம் எண் பார்க்கப்படும். குறைவான மதிப்புடைய ரேண்டம் எண் கொண்டிருக்கும் மாணவருக்கு கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப் படும்.அந்த வகையில், இந்த ஆண்டுபொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விண்ணப்பித்துள்ள ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பேருக்கும் இன்று கணினி மூலம் ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப் படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக் ககத்தில் பிற்பகல் 3 மணிக்கு உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன், முதன்மைச் செயலர்மங்கத்ராம் சர்மா, தொழில்நுட் பக் கல்வி இயக்குநர் கே.விவேகானந்தன் ஆகியோர் முன்னிலையில் கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரி வித்தார். இதைத்தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 6 முதல் 11 வரை தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்களில் நடைபெறும்.

Share this

0 Comment to "பொறியியல் படிப்புக்கு இன்று ரேண்டம் எண்: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...