நீட் தேர்வில் தமிழக அளவில்
பொன்னேரி பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ்மாணவி கே.ஸ்ருதி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
நீட் தேர்வில் 685 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 57-வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் ஓபிசி பிரிவில் அனைத்திந்திய அளவில் 9-வது இடத்தையும் கே.ஸ்ருதி பெற்றுள்ளார். இவரது தந்தை டாக்டர் எஸ்.கார்த்திகேயன். குழந்தைகள் நல மருத்துவர். தாய் ஆர்.கோமதி. மகப்பேறு மருத்துவர். திருவள்ளூரில் சொந்தமாக மருத்துவமனையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.மகளின் சாதனை குறித்துகூறிய டாக்டர் எஸ்.கார்த்திகேயன், “பொன்னேரி பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸில் தங்கி ஸ்ருதி படித்துவந்தார். அம்மா போல் மகப்பேறு மருத்துவர் ஆவதே அவரதுலட்சியம்.
பள்ளியில் சிறப்பு அனுமதி பெற்று விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு படித்தார். எங்கள் மகள் தமிழக அளவில் முதலிடம் பிடித்தது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.ஸ்ருதிக்கு வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி நிர்வாகம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments