பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு மற்றும்
நீதிமன்ற விவகாரம் காரணமாக மருத்துவ படிப்புக்கான அகில இந்திய கவுன்சிலிங்
தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ
கல்லுாரிகள் நிகர்நிலை மற்றும் மத்திய பல்கலைகளில் 15 சதவீதஎம்.பி.பி.எஸ். -
பி.டி.எஸ். இடங்கள் அகில இந்தியகவுன்சிலிங்கில் நிரப்பப்படுகின்றன.
இதற்கான 'ஆன்லைன்' கவுன்சிலிங் இந்திய மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி
சார்பில் www.mcc.nic.in என்ற இணையதளம் வழியே நடத்தப்படுகிறது.நடப்பு கல்வி
ஆண்டுக்கான கவுன்சிலிங்கில் விருப்ப கல்லுாரிகளை தேர்வு செய்யும் அவகாசம்
நேற்று மாலை 5:00 மணிக்கு முடிவதாக இருந்தது. இந்நிலையில் முதல்
சுற்றுக்கான கவுன்சிலிங் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து
இந்திய பொது மருத்துவ சேவைகள் இயக்குனரகம் நேற்று இரவு வெளியிட்ட
செய்திக்குறிப்பு: முதல் சுற்று மருத்துவ கவுன்சிலிங்கில் டில்லி இந்திர
பிரஸ்தா பல்கலையின் கல்லுாரிகளில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில்
இடம் வழங்குவது குறித்து சில பிரச்னைகள் எழுந்துள்ளன. மேலும் சென்னை உயர்
நீதிமன்றத்தில் 2016 மற்றும் 2017ல் தொடரப்பட்ட வழக்கின் அம்சங்களையும்
ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.இந்த காரணங்களால் நேற்று முடிவதாக இருந்த
விருப்ப கல்லுாரி பதிவு மற்றும் மாணவர்களின் புதிய பதிவுக்கான அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை ஆன்லைனில் விருப்ப
கல்லுாரிகளின் பதிவை மேற்கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுஉள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» மருத்துவ கவுன்சிலிங் பதிவு அவகாசம் நீட்டிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...