சர்வதேச யோகா தினம் வெள்ளிக்கிழமை
கொண்டாடப்படுவதையொட்டி அது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்த மத்திய மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகாவை சிறப்பித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தும் விதமாக ஜக்கிய நாடுகள் சபை உத்தரவின்படி சர்வதேச யோகா தினம்
ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி
வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ள சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு
முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்களில் யோகா சார்ந்து சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடுமாறு மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் விதமாக நிகழ்ச்சிகள், கட்டுரை, ஓவியம் உட்பட போட்டிகள் நடத்துமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...