NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Paper II - விண்ணப்பித்தும் 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை!

வேலை கிடைப்பதில் உறுதியற்ற
தன்மை:
TET 2ம் தாளை எழுத மறந்த 40 ஆயிரம் பேர்ஆசிரியர் தகுதித் தேர்வு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 40 ஆயிரம் பேர் தேர்வெழுத வரவில்லை.ஏராளமானோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், தேவையின் அடிப்படையிலேயே பணியிடங்கள்நிரப்பப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதனால் பணி வாய்ப்பு கிடைக்கும் என்ற உறுதித் தன்மை குறைந்ததால், விண்ணப்பித்தவர்களில் பலர் தேர்வெழுதவராமல் போயினர்.இரண்டாம் தாள் தேர்வுக்கு 4,20,957 பேர் விண்ணப்பித்த நிலையில், 3,80,317 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்ற"டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
32 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 1,081 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வில் நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 815 தேர்வர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுமார் 40 ஆயிரம் பேர் தேர்வெழுத வரவில்லை.வினாத்தாள் குறித்து சென்னையைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளில் சமூகவியல், அறிவியல்- கணிதம் என இரு பிரிவுகளில் தேர்வு நடைபெற்றது. சமூகவியல் பாடத்தில் பொருளாதாரம், புவியியல், குடிமையியல், வரலாறு சார்ந்த வினாக்களும், அறிவியல்-கணிதம்பிரிவில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய பிரிவுகளிலும் வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அதேவேளையில் இரு பிரிவுகளுக்கும் தமிழ், ஆங்கிலம், உளவியல் பாடங்களில் மட்டும் ஒரே மாதிரியாக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 150 ஆகும்.
என்னென்ன வினாக்கள்?:
நோட்டாவை அறிமுகப்படுத்தியதில் உலக அளவில் இந்தியா எத்தனையாவது நாடு, இந்திய அரசியலமைப்பில் எந்தப் பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றிக் கூறுகிறது, சரக்கு-சேவை வரி நடைமுறைப்படுத்தப்பட்ட நாள், பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு,"நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை' என புதுக்கவிதையை எழுதியவர் யார் என பல்வேறு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.தமிழ், ஆங்கில பாடங்களில் இடம்பெற்ற கேள்விகள் சற்று எளிதாக இருந்தன. ஆனால் கணிதம், அறிவியல், உளவியல் வினாக்கள் பாடப்பகுதியின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தன. பல கேள்விகளுக்கு யோசித்து பதில் எழுத வேண்டியிருந்தது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தேர்வு கடினமாகவே இருந்தது என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive