Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

+1 பொதுத்தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) நாளை காலை 9.50 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IMG_20200730_172811

நடைபெற்ற மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மற்றும் 27.07.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறுதேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.07.2020 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களும் 31.07.2020 அன்று காலை 9.50 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று , தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User - ID Login Password பயன்படுத்தி , தங்கள் பள்ளிகளுக்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் எனவும் , அதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . மேலும் , தேர்வர்கள் தங்களது விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் ( Statement of Marks ) வழங்குவதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் குறித்த விவரம் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும் .
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive