கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்தக் குடியின் மொழி தமிழ்
மொழி என்பதில் யாவர்க்கும் இல்லையொரு மாற்றுக் கருத்து. இதன் தனித்தன்மையே
சொல்லாற்றலும் கருத்தாழமும் தான்! மொழி யின் வளமை என்பது அம்மொழியைப் பயன்
படுத்துவோரின் எண்ணம் செயல் வடிவமாக வெளிப்படும் போது கால தேச
வர்த்தமானங்க ளைத் தன்னகத்தே கொண்டு செம்மாந்து நிற் கிறது. இதனால் தான்
தமிழ் உயர் தனிச் செம் மொழி இந்நூற்றாண்டின் விஞ்ஞான யுகம் திலும்
போற்றப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட மொழியில் பாமர மக் களும் அன்றாடம் தம் வாழ்வில் சரளமாகப் பேசி வரும் பழமொழிகள் தான் எத்தனை எத்தனை! அத்தனையும் வாழ்க்கையின் நவ பெண்களையும் வெளிப்படுத்தி வாழ்வின் நீரோட்டத்தை, மனித மன வளர்ச்சியின் வெளிப்பாடாகக் காலச்சுவடு பதித்து வருகிறது எனில் மிகையாகாது! பழமொழி பலப்பலவாயினும் அதனுள் இக்கட்டுரையில் நாம் காணப் போவது அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் என்பது!
இம்மொழிக்கு ஜனரஞ்சகமான கருத்து ... குழந்தை களை அல்லது சில முரண்டு பிடிக்கும் மனிதர் களையோ நாம் நினைத்தபடி செய்ய வைக்கவே கையாளப் படுகிறது. அவ்வெண்ணத்தின் வடிவாகவே உணரப் பட்டு வருகிறது. ஆனால், இத்தொடரின் பொருளைப் பிரித்து நாம் உண்மைத் தன்மையையும், சொல்லிய ஆன் றோர் சிந்தனையின் தெளிவையும் அறிய முயல்வோம்?
அடி - பாதத்தால் எடுத்து வைக்கப்படும் அடி
அடி - திருவடி
அடித்தலாகிய செயல்
அடி - மரம், செடி கொடி இவற்றின் இறுதி பாம்
முதலில் அடி என்பது ஒரு உறுப்பு என்று கொள் ளும்போது, 'எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்றாலும் இந்த எண் சாண் உடலை நல்லவற்றை நாடிச் சென்று அடைய, முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வைக்க அடி - பாதம் என்னும் காலடியே பயன் படுகிறது. இந்த அடி முன் போனால்தான் மற்ற செயல்கள் முறையாகும்
எனவே, அடி உதவுவது போல் மற்ற உறுப்புகள் அதாவது தலை முதல் கால் வரை உள்ள உறுப்புகள் காரணம் அன்று என்று உணர்த்துகிறது?
மற்றும் ஆன்மீக சிந்தனை வழியாக எண்ணிப் பார்க்கும் பொழுது அடி - இறைவனின் திருவடியை பற்றுக அப்படிப் பற்றினால் பிறவிப் பெருங்கடலை நீந்தலாம் அதனால்தான் வள்ளுவனும் 'பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்' என்று சிறப்புற குறள் வழி உணர்த்தினார் போலும்! தவிர நாம் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடும்பொழுது நாம் முதலில் தொழுவது இறைவனின் திருவடிதான். இறை வனின் திருவடியை வணங்கினால், அவன் காலை இறுகப் பற்றினால், நமது மனமாச்சரியங்கள், நம்மை இறுகப் பற்றிய பந்த பாசங்கள் அகலும் தெளிந்த நல் அறிவு பெருகும் என்பதால் தான். இறைவனின் திருவடியே சரணம் என்று இருப்பதை விடுத்து அண்ணன் தம்பி உதவுவான் என பந்த பாசங்களில் உழன்று வாழ்நாளை வீணடிக்காதே; 'பற்றுக பற்றற்றான் பற்றை' என நமக்கு அறிவுறுத்தியுள்ளனர் நம்முன்னோர்கள் என்பதே சாலப் பொருந்தும். என்ன உண்மைப் பொருளை உணர்ந்து அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் என முரட்டுத்தனமாக பிறரை அடிக்க, அடித்துத் திருத்தி நம் வழிக்குக் கொண்டு வரும் எண்ணத்தைக் கைவிடலாமா?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...