NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொழுத்தவனுக்கு கொள்ளும், இளைத்தவனுக்கு எள்ளும் கொடு -பழமொழிக்கட்டுரை

இப்பழமொழி அறிவியல் கோட்பாடு உள்ளடக்கியது. ஒவ்வொரு மனிதனுக்கும் உடலுக்கு உறுதி செய்ய நன்கு செயலாற்ற சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தியை நாம் பெரும்பாலும் உண்ணும் உணவுப் பொருட் களிலிருந்தே பெறுகிறோம் அவரவர் வயதிற் குட்பட்ட உணவு கலோரி வகைகளில் குறிப் பிட்ட அளவில் சரிவிகித அளவில் பெறுதல் மிகவும் அவசியமான ஒன்று. 'உடல் வளர்த் தோர் உயிர் வளர்த்தோர் என்பார் திருமூலர்.

'உடல் வளர்த்தோர்' என்னும் தொடரைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் கண்டதைத் தின்று வாய்க்கு ருசி மட்டும் பார்த்து உணவு உண்ணும் பழக்கம் கொண்டால் உடல் பருமனும், தேவையற்ற கொழுப்புச் சத்து மட்டும் மிகுந்து காணப்படும்

அதிலும் இன்றைய அவசர யுகத்தில் மக்கள் கடைவீதிகளில், சிற்றுண்டி சாலை களில் கிடைக்கும் எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுப் பண்டங்களை பெரிதும் உண் கின்றனர். இஃது ஆரோக்கியமான ஒன்றல்ல. சிறு வயது முதலே இத்தகு உணவு வகைகளை பெரிதும் விரும்பி உண்ணும் வழக்கம் அதிகரித்து வருகிறது எவ்வளவு உண்மையோ, அந்த அளவிற்கு சிறு வயதில் இருதய நோய், மாரடைப்பு, குடல்வால் நோய் எனப்படும் அல்சர் போன்ற நோய்க்கு ஆளாகி அறுவை சிகிச்சை வரை செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விடு கின்றனர் என்பதும் உண்மை

நாம் இக்காலத்தில் பெரியோர்கள் வாழ்ந்த பாதையை, நல்ல பழக்க வழக்கங்களை விட்டு நீண்ட தூரம் வந்ததின் விளைவு நோய் நொடிக்கும், மன உளைச் சலுக்கும் ஆளாகி, உடல் நலம் கெட்டு வாழும் அவலம் பெருகிவிட்டது. நம் முன்னோர் வகுத்த உணவுக் கட்டுப் பாடு, தயாரிப்பு முறை, மறந்தோம். நவதானியங்களை அவர்கள் காய்கறிகளோடு பயன்படுத்தி வகை, வகை யான உணவுப் பதார்த்தங்களைச் உடல் நலத்திற்கு ஊறு வரா வண்ணம் செய்து வந்தனர். தானியங்களில் கம்பு குளிர்ச்சியையும், கேழ்வரகு சற்று சூடானாலும் உடலுக்கு நல்ல சக்தியை தரும். கம்பங்கூழ் கோடைக்கேற்ற சிறந்த உணவு. 'கொள்ளு என்றால் குதிரைக்குப் போட மட்டும் பயன்படும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் உடல் பருத்து, கொழுத்து கொலஸ்ட்ரா லில் அவதிப்படுவோருக்கு ஏற்ற தானியம் கொள்ளு!

இதை அன்றாடம் உணவில் ஏதேனும் ஒரு வகை யில் சேர்த்துவர கொழுப்புச் சத்தைக் குறைத்து உடல் நலம் பெறலாம் என்பதை இன்று மருத்துவர்களும் கூறும் செய்தி! இதை அன்றே உணர்ந்து செயல் படுத்தி வந்துள்ள னர், பெரியோர்கள். 'எனவே தான் கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்ற மொழி பிறந்திருக்கிறது. அனுபவ அறிவின் வாயிலாக, அறிவியல் மொழியாகவும் நம்மால் உணரப்படும் ஒன்று. கொழுத்தவனுக்கும் கொள்ளு என்றால், இளைத்தவனுக்கு எள்ளு கொடு - பின்பாதி மொழியைப் பார்க்கும்போது நம்முடைய ஆன்றோர் களுக்குச் சமுதாயத்தின் மேல் இருந்த அக்கறை புரி கிறது 'உடல் பெருத்தவனுக்குக் கொள்ளு' அப்பொழுது உடல் இளைத்து எலும்பும் தோலுமாக இருந்தாலும் மனிதனின் தோற்றம் நன்றாக இருக்காது. எனவே அவனின் நலத்தைக் கருத்தில் கொண்டு சொன்னதே பின்பாதி மொழி. பழமொழிகள் எதுகை மோனையோடு அறிவியல் பார்வையை அணைத்து வந்து நம்மை சிந்திக்க வைக் கிறது. 'எள் மிகச் சிறந்த தானியம். 'எள்’ உடலில் இரத்த சுத்தி செய்து நம் உடலுக்குத் தேவையான சக்தியைத் தந்து உடல் எடையைக் கூட்டவும் பயன்படுகிறது.

ஏழைக்கேத்த எள்ளுருண்டை' என்பது மற்று மொரு பழமொழி. மிகவும் மலிவு விலையில், அதிகப் பயனைத் தரும் மிகச் சிறந்த பொருள் 'எள் எளிதில் கிடைப்பதோடு, ஏழையும் அவன் சக்திக்குத் தேவை யான இனிப்பு செய்து சாப்பிட்டு உடல் வலிமை பெற முடியும்! இதுவும் இன்றைய மருத்துவ வல்லுநர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களுக்கு 'உணவு முறை' வழி காட்டலில் அறிவுறுத்தப்படுகிறது.

அன்று சொன்னவை யாவும் அர்த்தமுள்ளவை' என்பதைப் புரிந்து நம் உணவுப் பழக்கத்தை மேற்கண்ட பழமொழியின் கருத்தறிந்து கைக்கொள்வோமா?




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive