NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

06.02.2022 - (Answer updated) ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாத்தாள்!

 

 

ஒன்பதாம் வகுப்பு இயல் 6.

வினாக்கள்

1)" அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)_____" என்னும் குறளில் எவ்வணி பயின்று வந்துள்ளது?
அ) உருவக அணி 
ஆ) உவமை அணி 
இ) வேற்றுமை அணி 
ஈ) ஏகதேச உருவக அணி

2)" உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றது ______"என்னும் குறளில் விடுபட்டவற்றை நிரப்புக?
அ) எழுவாரை எல்லாம் பொறுத்து
ஆ) உழந்தும் உழவே தலை இ) அறம்நாணத் தக்கது உடைத்து
ஈ) ஆழி எனப்படு வார் 
 
3) யார் தவறு செய்வதில்லை என வள்ளுவர் கூறுகிறார்?
அ) வீரம் படைத்தவன் 
ஆ) அரசன் 
இ) ஒழுக்கமான குடியில் பிறந்தவன் 
ஈ) பொறுமை உடையவன்

4) பிறரிடம் அன்பும் பழிக்கு நாணுதல் அனைவரிடமும் இணக்கமும் இரக்கமும் உண்மையும் _____ -யைத் தாங்கும் தூண்கள்.
அ) நாணுடைமை 
ஆ) சான்றாண்மை 
இ) குடிமை
ஈ) உழவு

5) எத்தொழிலே சிறந்தது என வள்ளுவர் கூறுகிறார்?
அ) உழவுத் தொழில் 
ஆ) போர்த் தொழில் 
இ) வாணிகம் 
ஈ) நெசவுத் தொழில்

6)" இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்____" -என்னும் குறளில் 
விடுபட்டவற்றை நிரப்புக.
அ) கண்டானாம் தான் கண்டவாறு
ஆ) இன்பத்துள் துன்பங் கெடின் 
இ) போஓம் அளவும் ஒர் நோய் 
ஈ) குன்றுவ செய்தல் இலர்

7) "பிறர்நாணத் தக்கது தான் நாணாண் ஆயின் அறம்நாணத் தக்கது உடைத்து" -என்னும் குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம் என்ன?
அ) உழவு
ஆ) நாணுடைமை
இ) சான்றான்மை
ஈ) குடிமை

8)" கல்லும் உலோகமும் செங்கலும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்"- என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
அ) சிலப்பதிகாரம் 
ஆ) மணிமேகலை 
இ) மத்தவிலாசப் பிரகசனம் 
ஈ) திவாகர நிகண்டு

9) கீழ்க்கண்ட எந்நூலில் சிற்பக்கலை பற்றிய குறிப்பு உள்ளது?
அ) அகத்தியம்
ஆ) நன்னூல் 
இ) நற்றிணை 
ஈ) தொல்காப்பியம்

10) கொடும்பாளூரில் மூவர் கோயிலை கட்டியவர் யார்?
அ) மூன்றாம் குலோத்துங்க சோழன் 
ஆ) இரண்டாம் ராசராசன் 
இ) ராஜேந்திர சோழன்
ஈ) இரண்டாம் பராந்தக சோழன்

11)  "மைவனம்"
அ) ஈரநிலா
ஆ) மழைநெல் 
இ) சந்தனம் 
ஈ) இறகு


 12) "இராவண காவியம் காலத்தின் விளைவு ஆராய்ச்சியின் அறிகுறி புரட்சி உண்மையை உறைய வைக்கும் உன்னத நூல்" எனக் கூறியவர் யார்? 
அ) மு.வ
ஆ) பெரியார் 
இ) அண்ணா 
ஈ) திரு.வி.க

13) ராவண காவியத்தில் அமைந்த பாடல்களின் எண்ணிக்கை?
அ) 3200
ஆ) 3100
இ) 3150
ஈ) 3300

14) யாருடைய வேண்டுகோளுக்கிணங்க 25 நாட்களில் திருக்குறளுக்கு புலவர் குழந்தை உரை எழுதினார்?
அ) அண்ணா 
ஆ) பெரியார் 
இ) மூ. வ
ஈ) திரு.வி.க

15) ராவண காவியத்தில் அமைந்த காண்டங்களின் எண்ணிக்கை?
அ) 3 
ஆ) 5
இ) 7 
ஈ) 4

16) தவறாக பொருந்தியுள்ளது எது?
அ)  இடிகுரல் -  உவமைத்தொகை 
ஆ) இன்னுயிர் - பண்புத்தொகை
இ) பிடிபசி - வேற்றுமைத்தொகை
 ஈ) பைங்கிளி - வினைத்தொகை

17) "பூக்கும்" என்பதனை பகுபத உறுப்பிலக்கணப் படி பிரித்துஎழுதுக?
அ) பூ+க்+உம்
ஆ) பூ+க்+ங்+உம்
இ) பூக்+கும்
ஈ) பூ+க்+க்+உம்

18) 'தாமம்' - என்னும் சொல்லின் பொருள்?
அ) நடனம் 
ஆ) மாலை 
இ) விளக்கு 
ஈ) அசைவு 

19) யாருடைய வளர்ப்பு மகள் ஆண்டாள்?
அ) திருமங்கையாழ்வார் ஆ) பூதத்தாழ்வார் 
இ) பெரியாழ்வார்
ஈ) பேயாழ்வார் 

20) "முத்துடை தாமம்" என்பதன் இலக்கணக் குறிப்பு  யாது?
அ) வினையெச்சம் 
ஆ) மூன்றாம் வேற்றுமைத்தொகை 
இ) வினைத்தொகை 
ஈ) இரண்டாம் வேற்றுமைத் தொகை

21) "மின்சாரப்பூ" - என்னும் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு?
அ) 2010 
ஆ) 2008
இ) 1996
ஈ) 1987

22) "ஒரு சிறு இசை"- என்னும் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?
அ) நாஞ்சில் நாடன் 
ஆ) ஆதவன் 
இ) வண்ணதாசன் 
ஈ) அசோகமித்திரன்

23) தவறாக பொருந்தியுள்ளது எது?
அ) அன்பளிப்பு - கு. அழகிரிசாமி 
ஆ) சக்தி வைத்தியம் - தி. ஜானகிராமன்
இ) முதலில் இரவு வரும் - அண்ணா 
ஈ) சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்

24) கு. அழகிரிசாமி சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு என்ன?
அ) 1970
ஆ) 1980
இ) 1990
ஈ) 1970

25) "சங்கீத இரத்னாகரம்" எனும் நூல் இயற்றப்பட்ட காலம்?
அ) 16 -ம் நூற்றாண்டு 
ஆ) 10 -ம் நூற்றாண்டு 
இ) 12 -ம் நூற்றாண்டு 
ஈ) 13 -ம் நூற்றாண்டு

26) நாகசுரக் கருவி எம் மரத்தினால் செய்யப்படுகிறது?
அ) ஆலமரம் 
ஆ) பலாமரம்
இ)  பனைமரம் 
ஈ) ஆச்சாமரம்

27)"கருங்கடலும் கலைகடலும்" - எனும் நூலை தி. ஜானகிராமன் வெளியிட்ட ஆண்டு என்ன?
அ) 1967
ஆ) 1974
இ) 1980
ஈ) 1984

28) எழுத்து வகை சொற்கள்_____ வகைப்படும்.
அ)  2 
ஆ) 3 
இ) 4
ஈ)  5 

29) மெய் முன் உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?
அ) மணியடி 
ஆ) பனிக்காற்று
இ) ஆலிலை
ஈ) மரக்கிளை

30) கீழ்க்கண்டவற்றில் நெடில் தொடர் குற்றியலுகரம் எது?
அ) எஃகு
ஆ) முதுகு 
இ) மார்பு 
ஈ) பேசு

31) "நட்புக்காலம்"- என்னும் நூலின் ஆசிரியர் யார்?
அ) கிருபானந்தவாரியார்                            ஆ) அறிவுமதி 
இ) சுரேஷ்
 ஈ) சுரதா

32)கீழ்க்கண்டவற்றில் மரபுப் பிழையற்ற தொடர் எது?
அ)கயல் பானை செய்யக் கற்றுக்கொண்டாள்
ஆ) நேற்று தென்றல் காற்று அடித்தது
இ) தென்னை
 மட்டையிலிருந்து  நார் எடுத்தார்.
ஈ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்

33) பல்லவர் கால சிற்பங்களுக்கு சிறந்த சான்று? 
அ) மாமல்லபுரம் 
ஆ) பிள்ளையார்பட்டி
இ) திரிபுவன வீரேசுவரம் 
ஈ) தாடிக்கொம்பு

34) விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடத்தப்படுவது எது?
அ) மைல்கள் 
ஆ) சுடுகள்
இ) நடுகல் 
ஈ) கருங்கல்

35) மாளிகைகளில் சுதைச் சிற்பங்கள் இருந்ததைக் குறிப்பிடும் காப்பியம் எது?
அ) சீவக சிந்தாமணி
ஆ) மணிமேகலை 
இ) நளவெண்பா 
ஈ) சிலப்பதிகாரம்

36)" பொதுவர்கள் பொலி உறபெள அடித்துவிடும்" - நிலப்பகுதி____
அ) குறிஞ்சி
ஆ) நெய்தல் 
இ) முல்லை 
ஈ) பாலை 

37) "தொடையதிகாரம்"- என்னும் நூலின் ஆசிரியர் யார்?
அ) பெருந்தேவனார் 
ஆ) வாணிதாசன் 
இ) கண்ணதாசன் 
ஈ) புலவர் குழந்தை

38) காஞ்சியும், வஞ்சியும் பூக்கும் நிலம்_____
அ) குறிஞ்சி 
ஆ) முல்லை 
இ) மருதம்
ஈ) நெய்தல்

39)" அப்பாவின் சினேகிதர்" நூலின் ஆசிரியர் யார்?
அ) அகிலன் 
ஆ) அசோகமித்திரன்
 இ) ஆதவன் 
ஈ) நாஞ்சில்நாடன்

40) வட்டு+ஆடினாள்= எவ்வகைப் புணர்ச்சியில் வரும்?
அ) பண்புப் பெயர்ப்புணர்ச்சி
ஆ) குற்றியலுகரப் புணர்ச்சி
இ) இயல்பு புணர்ச்சி 
ஈ) திசைப் பெயர்ப் புணர்ச்சி

41) அடுக்கிய கோடி பெறினும் குன்றுவ செய்யாதவர்
அ) குடிஇழிந்தார்
ஆ) குடி இறந்தார்
இ) குடிப்பிறந்தார்
ஈ) குடிமகிழந்தார்

42) ஊழி பெயரினும் தான் பெயராதவர்
அ) பொய்மையுடையவர்
ஆ) இழித்தன்மையுடையவர்
இ) சான்றாண்மையுடையவர்
ஈ) கொடுங்கோலர்

43) “சாகும் வரை உள்ள நோய்” – என்று வள்ளுவர் யாரைக் கூறுகிறார்?
அ) அறிவுடையாரை
ஆ) புல்லறிவுடையாரை
இ) அன்புடையாரை
ஈ) பண்புடையாரை

44) காணாதான் காட்டுவான் – காணாதான் யார்?
அ) அறிவுடையான்
ஆ) அறிவில்லாதவன்
இ) அன்புடையான்
ஈ) பண்புடையான்

45) அடுப்பிடு சாந்த மோடு அகிலின் நாற்றமும் துடுப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும் ……………. இவ் அடிகளில் உள்ள நயங்கள்.
அ) அடியெதுகை, அடிஇயைபு
ஆ) சீர்மோனை, சீர்எதுகை
இ) அடிமோனை, அடிஇயைபு
ஈ) சீர்மோனை, சீர்இயைபு

46) திருமாலை வழிபட்டு சிறப்புநிலை எய்தியவர்கள் ……………..
அ) நாயன்மார்கள்
ஆ) ஆழ்வார்கள்
இ) சமணர்கள்
ஈ) தேவர்கள்

47) ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு …………….. ஆகும்.
அ) பெரிய புராணம்
ஆ) நாலாயிரதிவ்ய பிரபந்தம்
இ) நளவெண்பா
ஈ) பூதத்தாழ்வார்

48) நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியவை யாவை?
அ) திருப்பாவை
ஆ) நாச்சியார் திருமொழி
i) அ – சரி
ii) ஆ – சரி
iii) இரண்டும் சரி
iv) இரண்டும் தவறு

49) கைத்தலம் இலக்கணக்குறிப்பு யாது?
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை 
ஈ) உவமைத்தொகை

50) மரவேர் என்பது ……………. புணர்ச்சி
அ) இயல்பு
ஆ) திரிதல்
இ) தோன்றல்
ஈ) கெடுதல்

51) நிலை மொழி ஈற்றில் இ, ஈ, ஐ வரும் போது இடம்பெறும் உடம்படுமெய் …………..
அ) யகர உடம்படுமெய்
ஆ)வகர உடம்படுமெய்
இ) இரண்டும் வரும்
ஈ) இரண்டும் வராது

52) காது, பேசு – இது எவ்வகைக் குற்றியலுகரம்.
அ) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
ஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்
இ) வன்தொடர்க் குற்றியலுகரம்
ஈ) மென்தொடர்க் குற்றியலுகரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive