Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.02.22

  

 திருக்குறள் :

பால் : பொருட்பால், 

இயல் : நட்பியல், 

அதிகாரம்:தீ நட்பு 

குறள் எண்:815.

செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. 

பொருள்:
காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதைவிட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.

பழமொழி :

What is one man's meal is another man's poison.


பூனைக்கு கொண்டாட்டம், எலிக்கு திண்டாட்டம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிலையான வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது எனவே நேர் வழியில் தான் என் வாழ்க்கை அமைத்துக் கொள்வேன். 

2. என் வாழ்வில் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் நன்மைக்கே.எனவே எதைக் குறித்தும் கலங்காமல் முன்னேறி செல்வேன்

பொன்மொழி :

வெற்றி எனும் உயரத்தை
அடைய ஏணியாக
இருக்கும் ஆயுதம் தான்
தன்னம்பிக்கை அதை
எப்போதும் வளர்த்துக் கொள்.....சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு :

1. இந்திய குடியரசின் அதிகாரப்பூர்வ மொழிகள் எத்தனை? 

22 மொழிகள். 

2. 1 டிகிரி தீர்க்க ரேகையைக் கடக்க பூமி எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு? 

4 நிமிடம்.

English words & meanings :

Astonished - surprised, மிகுந்த ஆச்சர்யம், 

narrate - tell, சொல்லுதல்

ஆரோக்ய வாழ்வு :

செவ்வாழைப்பழம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பல் வலி, பல்லசைவு போன்ற உபாதைகளையும், விரைவில் குணப்படுத்தும். உடல் எடையை கட்டுப்படுத்தும். 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.

நீதிக்கதை


உருவத்தை பார்த்து பழகாதே

ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு... என்னைப்பிடி பார்க்கலாம் என்றான். என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது.

அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான். அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன. அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்றபோது, பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு? அதான்...

ஓ....! காகமா, காகத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப் பற்றி தப்பாக நினைக்கக் கூடாது என்று, அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம். என கூறி சென்றது. அடுத்த நாள் வந்தது. குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது. அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய் அங்கே பாரு வெள்ளையா... அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா இருக்கு. அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.

உடனே மீன் குஞ்சுகள், அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா? கொக்குக்கு ஒரே கொண்டாட்டம். ஓ! தொட்டுப் பாரேன். ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டிக்கிட்டியா? என்றது. மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன. அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.

மற்ற மீன் குஞ்சுகள், அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியெடுத்து கொண்டன. அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோஷமாக வாழ்ந்தன.

இன்றைய செய்திகள்

26.02.22

✅ தமிழகம் முழுவதும் அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்.


✅ புதுச்சேரியில் மார்ச் 19-ல் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு  நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


✅ நாசாவின் செயற்கைக்கோளுக்கு சிக்காத சூரிய புரோட்டான் நிகழ்வுகளை சந்திரயான்-2 விண்கலம் கண்டறிந்தது: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்.

✅ ரஷ்யாவின் தாக்குதலால் விமான போக்குவரத்து நிறுத்தம் - உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்.

✅ உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் வடக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் குவிந்துள்ள நிலையில், உக்ரைன் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

✅ 'மெட்ரோ ரயில் நிலையத்தில் 30 மணி நேரமாக தஞ்சம்... எங்களை பிரதமர் மோடி மீட்க வேண்டும்' - உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள்.

✅ ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்.

✅ காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் மீராபாய் ஜானு.

Today's Headlines

✅ Aadhar Special Camp at Post Offices across Tamil Nadu.

 ✅ It has been announced that the written test for the post of a police officer will be held on March 19 in Pondicherry.


✅ Chandrayaan-2 spacecraft detects solar proton events that are not captured by NASA's satellite: information by Indian Space Research Organization

 ✅ Air traffic is stopped due to a Russian attack - now Indians stranded in Ukraine.

 ✅ As Russian forces concentrate north of the Ukrainian capital, Kyiv, Russia has said it is ready for talks if Ukraine stops fighting.

 ✅ 'Asylum at the metro station for 30 hours ... Prime Minister Modi must rescue us' - Indian students stranded in Ukraine.

✅ 2nd ODI against Afghanistan: Bangladesh won the series.

 ✅ India's Mirabai Janu qualifies for Commonwealth Games
 Prepared by

Covai women ICT_போதிமரம்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive