Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.03.22

    திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: தீ நட்பு

குறள் எண்: 817

குறள்:
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்

பொருள்:
சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்

பழமொழி :

Try and try again you will succeed at last.


அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

நம்முடன் வாழ்வோரை
புரிந்து கொள்வதற்கு
நம்மை முதலில் புரிந்து
கொள்ள வேண்டும்...அன்னை தெரேசா

பொது அறிவு :

1.நம் வாழ்நாள் முழுதும் வளரும் உடலின் பாகங்கள் எவை? 

மூக்கு மற்றும் காது. 

2. ஆழ்கடலில் சுவாசிக்க பயன்படும் வாயுக்கலவை எது? 

ஆக்சிஜன் - ஹீலியம்.

English words & meanings :

Swamped - very busy, மிகவும் வேலையாக,

 Luminous - bright, ஒளிரக்கூடிய

ஆரோக்ய வாழ்வு :

உலர் திராட்சையின் பயன்கள்: தினசரி உணவுக்குப் பின்னர் காலை, மாலையில் 25 உலர் திராட்சைப்பழங்களை தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டால், மூலநோய் குணமாகும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், இதய நோய் தீரும். இதிலுள்ள கால்சியம் சத்து, எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
கணினி யுகம் :

Alt + F - File menu options in current program. 

Alt + E - Edit options in current program.

மார்ச் 01


பாகுபாடுகள் ஒழிப்பு நாள்

பாகுபாடுகள் ஒழிப்பு நாள் (Zero Discrimination Day)  என்பது ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். உலக நாடுகளில் சட்டத்திலும், நடைமுறையிலும்  மனித சமுதாயத்தில் தொடர்கிற பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறைகூவல் விடுக்கும் நாளாக இது உள்ளது.  இந்த நாள் 2014 மார்ச் 1 அன்று முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இதை   பெய்ஜிங்கில் ஒரு முக்கிய நிகழ்வுடன் அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ஐநா எய்ட்ஸ் விழிப்புணர்வு/கட்டுப்பாடு அமைப்பின் (யுனெய்ட்ஸ்) நிறைவேற்று இயக்குனரான மைக்கேல் சிடிப் என்பவரால் தொடங்கப்பட்டது

நீதிக்கதை


சுயநலம்

ஒரு ஊரில் ராமசாமி என்ற ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சுயநலமானவர். அவர் ஊருக்குச் சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். அந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி வருத்தப்பட்டார். 

சில நாட்கள் கழித்து குரு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியினுடையதாக இருக்கலாம் எனக்கருதி, அதை குரு அவரிடம் கொடுத்தார். 

குருவிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட ராமசாமி, இதை வைத்து ஒரு திட்டம் தீட்ட நினைத்தார். அவன் குருவிடம், நான் இந்த பையில் 40 தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்த பையில் இப்போது 30 தங்க நாணயங்களே உள்ளன, அதனால் மீதமிருக்கும் 10 நாணயங்களை திருப்பி தரவேண்டுமென குருவிடம் கூறினார். 

குருவோ மிகவும் நல்லவர். பிறரின் பொருட்களுக்கு ஆசைப்படாத அவரது குணத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். 

நண்பர்கள் இருவரும் ஊரில் உள்ள தலைவரிடம் சென்றனர். விவரத்தை கேட்ட ஊர் தலைவர், ராமசாமியிடம், நீ எவ்வளவு தங்க நாணயங்களை தொலைத்தாய்? என்று கேட்டார். அதற்கு அவர் 40 தங்க நாணயங்கள் என்றார். குருவை பார்த்து நீ எவ்வளவு தங்க நாணயங்களை கண்டுபிடித்தாய்?என்று கேட்டார். அதற்கு அவர் 30 தங்க நாணயங்கள் என்றார். 

ஊர்த்தலைவர் ராமசாமியை பார்த்து, நீ தொலைத் திருப்பதோ 40 தங்க நாணயங்கள். ஆனால் குரு கண்டறிந்திருப்பதோ வெறும் 30 தங்க நாணயங்கள். எனவே இது உன்னுடையதாக இருக்காது. இனிமேல் வேறுயாராவது 40 தங்க நாணயங்களை கொண்டுவந்தால் உனக்கு சொல்லி அனுப்புகிறேன். இப்போது நீ கிளம்பலாம் என்றார். 

தலைவர் குருவைப்பார்த்து நீ கண்டுபிடித்திருப்பது ராமசாமியின் தங்க நாணயங்கள் கிடையாது, எனவே இதை நீயே வைத்துகொள் என்றார். 

தான் கூறிய பொய்யால் தனக்கு நேர்ந்த சங்கடத்தை எண்ணி வருத்தபட்டார். தனது தவறை உணர்ந்த அவர், இனி சுயமில்லாத நேர்மையான மனிதராக வாழவேண்டும் என முடிவுசெய்தார்.


இன்றைய செய்திகள்

01.03.22

◆கடுமையான போர் சூழலில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் 5 பேர் சென்னை வந்தனர்: விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.

◆திருப்பத்தூர் அருகே 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

◆உக்ரைனில் இருந்து 1,500 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்: 23 மாணவ, மாணவிகள் தமிழகம் வந்து சேர்ந்தனர்.

◆மாணவர்களை பத்திரமாக மீட்டு வருவதே இந்தியாவின் முன்னுரிமையாக உள்ளது, அதேசமயம் போரை நிறுத்துவதும், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதும் எங்கள் முன்னுரிமையாக உள்ளது என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறியுள்ளார்.

◆பொருளாதாரத் தடைகள், ஸ்விஃப்ட்டில் இருந்து விலக்கி வைப்பு, ரஷ்யன் சென்ட்ரல் பேங்கை முடக்கும் முயற்சிகளால் ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.

◆துபாய் ஓபன் சர்வதேச டென்னிசில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் மகுடம் சூடினார்.

◆சர்வதேச குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் நிஹாத், நித்துவுக்கு தங்கப்பதக்கம்.

Today's Headlines


◆ In the severe wartime, 5 Tamil students who were saved from Ukraine reached Chennai. They were received by minister Senji Mustan.

◆Near Tiruppaththur 14th century stones were found.

◆From Ukraine 1,500 Indian students were returned among them were 23 Tamil students.
 
◆We are much concerned about the safety of Indian students at the same time we are giving more priority to give pressure to Russia to stop the war.....says Ukraine Ambassador for India.

◆Banning in the economy, abandoned in SWIFT, and also trying to lock out the Russian Federal Bank all these things made a historical loss in the rate of Russian Ruple.

◆ In Dubai international open tennis Russian Player Anthre Rooplev won the match 

◆ In international boxing Indian players, Nihath and Niththu won the gold medal
 Prepared by

Covai women ICT_போதிமரம்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive