தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு " எண்ணும் எழுத்தும் " என்ற தலைப்பின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் பொருட்டு , பயிற்சிக்கான 12 கட்டகங்கள் மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது . இப்பயிற்சி கட்டகங்கள் அனைத்தும் பின்வரும் கால அட்டவணையின்படி TNEMIS வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தங்களது User Id மற்றும் Password - மூலமாக Login செய்து இணையத்தள வாயிலாக இப்பயிற்சியினைப் அவசியம் பெற்றுக் கொள்ள வேண்டும். இக்கட்டகங்கள் அனைத்திலும் காணொலிகள் , செயல்பாடுகள் மற்றும் மதிப்பீடு அடங்கியனவாக இருக்கும். ஒவ்வொரு கட்டகத்தின் இறுதியில் ஆசிரியர்கள் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவர். நிர்ணயிக்கபட்ட மதிப்பெண்ணை பெற்றிருப்பின் அவர்களுக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ள இயலும் . நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை பெறாவிடில் மீளவும் அந்த கட்டகத்தில் பயிற்சி பெறுதல் வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...