NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.02.22

   திருக்குறள் :

பால் :பொருட்பால்

இயல்:நட்பியல்

அதிகாரம் : பழைமை

குறள் எண்:806

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

பொருள்:
நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்.

பழமொழி :

Pride goes before a fall.
அகம்பாவம் அழிவை தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிலையான வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது எனவே நேர் வழியில் தான் என் வாழ்க்கை அமைத்துக் கொள்வேன். 

2. என் வாழ்வில் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் நன்மைக்கே.எனவே எதைக் குறித்தும் கலங்காமல் முன்னேறி செல்வேன்

பொன்மொழி :

சத்தான உணவால் உடல் பலம் பெறுவது போல, நல்ல எண்ணத்தால் மனம் பலம் பெறுகிறது...காந்திஜி

பொது அறிவு :

1. சர்வதேச புலிகள் தினம் எப்போது? 

ஜுலை29. 

2. மனித குருதியின் Ph மதிப்பு எவ்வளவு? 

7.35-7.45

English words & meanings :

Challenging job - difficult job, கடினமான வேலை 

 Appetizing - tasty, மிகவும் ருசியான

ஆரோக்ய வாழ்வு :

இரவில் தேன் கலந்து சாப்பிட்டால் இதயம் வலிமை பெறும். பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சக்தி கிடைக்கும். மாதுளம் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் ஊறும். எலுமிச்சம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும். இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் குறையும். சுண்ணாம்பில் தேன் கலந்து கட்டிகள் உள்ள இடத்தில் தடவ, வீக்கம் குறையும், கட்டிகளும் ஆறிவிடும்.

கணினி யுகம் :

Ctrl + home - Go to beginning of document. 

Ctrl + end - Go to end of document

பிப்ரவரி 21



பன்னாட்டுத் தாய்மொழி நாள்




பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.[1]
வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 அன்று பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்நாளை யுனெசுக்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெசுக்கோ பாரிசில் "தாய்மொழிகளும் நூல்களும் - எண்ணிம நூல்களும் பாடநூல்களும்" (“Mother tongues and books - including digital books and textbooks”) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது

நீதிக்கதை

யானையின் அடக்கம்!

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது! என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, அப்படியா, நீ பயந்து விட்டாயா? என்று கேட்டது. அதற்குக் கோவில் யானை, நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்.

நீதி: தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

இன்றைய செய்திகள்

21.02.22

★அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு மாத உதவித்தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

★தூத்துக்குடியில் முதல் முறையாக வாக்களித்த நரிக்குறவர் இன மக்கள்: புதிய அனுபவமாக இருந்ததாக பெருமிதம்.

★நிலத்தின் வளத்தைக் கெடுக்கிற சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டும்: தமிழகம் முன்மாதிரியாக செயல்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

★உக்ரைனில் வசிக்கும் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அத்தியாவசியமான தேவையில்லாத சூழலில் தாயகம் திரும்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

★இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய சந்தைகளை திறக்க இந்தியா - ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடையே பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

★கரோனா தொற்று இல்லாத நாடுகள் எவை என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலான நாடுகள் பசிபிக் மற்றும் அட்லான்டிக் பெருங்கடலில் உள்ள தீவு தேசங்கள்.

★ரஷ்யா - பெலாரஸ் இணைந்து கூட்டு போர் பயிற்சி; உக்ரைன் அருகே தயார் நிலையில் ரஷ்ய போர் விமானங்கள்: புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு.

★ரஞ்சி கோப்பை : தமிழ்நாடு - டெல்லி அணிகள் மோதிய போட்டி 'டிரா'.

★புரோ கபடி லீக் போட்டி; புனேரி பால்டன், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெற்றி.


Today's Headlines

★  The  Deputy Governor of Pondicherry has approved the amendment Bill to provide monthly stipend of Rs 5,000 for 2 years. 

 ★ Narikkuvar ethnic people  voted for the first time in Thoothukudi: Proud moment for them to have such a novel experience.

 ★ Destroy sessile oak trees that deplete land resources: High Court advices Tamil Nadu to set an example.

 ★ The Central Government has asked Indians, including students living in Ukraine, to return home in a situation where they are not essential.

 ★ India-UAE Economic Partnership Agreement signed to open new markets for Indian goods and services.

 ★ The World Health Organization has released a list of countries without corona infection.  The list includes 10 countries.  Most of these countries are island nations in the Pacific and Atlantic Oceans.

 ★ Russia-Belarus joint military exercise;  Russian warplanes ready near Ukraine: New satellite photos released.

 ★ Ranji Trophy: Tamil Nadu - Delhi teams clash 'draw'.

 ★ Pro Kabaddi League Tournament;  Puneeri Bolton, Gujarat Giants win.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive