காலை உணவுத் திட்டத்திற்கு தனி உணவுக் கூடம் அமைத்தது ஏன்? - அமைச்சர் விளக்கம்

868338

காலை உணவுத் திட்டத்தில் நேரம் தவறக்கூடாது என்று தான் தனி உணவுக் கூடம் அமைக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை மாதவரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினர்.இனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது உண்மைக்கு மாறானது. தன்னார்வலர்கள் உதவியுடன் ஒரு சில பள்ளிகளில் மட்டுமே அதிமுக ஆட்சியில் உணவு வழங்கப்பட்டு பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டது.

மேலும், அவர்கள் கூறுவதுபோல் காலை உணவுத் திட்டத்தில் உணவு வழங்குவதில் அம்மா உணவகம் புறக்கணிக்கப்படவில்லை. இந்த திட்டத்தில் குழந்தைகளுக்கு உணவு தயாரிப்புக்கு என மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தனிப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான உணவில் நேரம் தவறக் கூடாது என்று தான் தனி உணவுக் கூடம் அமைக்கப்பட்டது.

இன்ஃப்ளுயன்சா வைரஸால் ஜனவரியில் இருந்து தற்போது வரை 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்" என்று அமைச்சர் கூறினார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive