திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
விளக்கம்:
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாத சொற்களை சொல்ல கூடாது.
பழமொழி :
A good reputation is a fair estate
நற்குணமே சிறந்த சொத்து.
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
இழந்த செல்வத்தை உழைப்பால் திரும்பப் பெறலாம், இழந்த அறிவை படிப்பால் திரும்பப் பெறலாம், இழந்த ஆரோக்கியத்தை பத்தியம் அல்லது மருத்துவத்தால் திரும்பப் பெறலாம், ஆனால் இழந்த நேரம் என்றென்றும் இழந்ததுதான். --சாமுவேல் ஸ்மைல்ஸ்
பொது அறிவு :
1. நிலவில் முதன் முதலில் இறங்கியவர் யார்?
விடை: நீல் ஆம்ஸ்ட்ராங்
2. எவரெஸ்ட் சிகரத்தில் முதலில் ஏறியவர்கள் யார்?
விடை: எட்மண்ட் ஹிலாரி மற்றும் ஷெர்பா டென்சிங் நோர்கே
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
ஜூன் 23
நீதிக்கதை
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 23 நாட்களாக அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு முதியவரைக்காண அவருடைய குடும்பத்தினர் யாருமே வராத நிலையில் ஒரு புறா மட்டும் தினமும் வந்து அந்த முதியவர் சிகிச்சையிலிருந்த ஜன்னலின் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்ததாம்.
தொடர்ந்து ஓரிறு நாட்கள் இதைக்கவனித்த நர்ஸ் பெண்மணி புறா வந்த நேரம் ஜன்னலைக் கொஞ்சம் திறந்து விட்டாராம். அதற்கெனவே காத்திருந்ததைப்போல உடனே அந்தப்புறா உள்ளே வந்து இந்த முதியவரின் மேல் சிறிதுநேரம் அமர்ந்திருந்துவிட்டு பறந்து போய்விட்டதாம். அதன் பிறகும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மாலை வேளைகளில் அந்தப் புறா வந்து ஜன்னலோரம் அமர்வதும் நர்ஸ்கள் ஜன்னலைத் திறந்து விடுவதும் சில நிமிடங்கள் அந்த முதியவரின் மேல் இருந்துவிட்டுப் புறா பறந்து செல்வதும் வழக்கமாகியிருந்ததாம்.
இந்த விசித்திரமான நடைமுறையைக் கேள்விப்பட்ட தலைமை மருத்துவர் அந்த முதியவரின் பின்புலத்தை அறிந்துவருமாறு மருத்துவமனை ஊழியர் ஒருவரிடம் சொல்லியிருக்கிறார். அந்த ஊழியரும் இந்த முதியவர் தங்கியிருந்த முகவரிக்குச் சென்று விசாரித்தபோதுதான் ஒரு உண்மை தெரியவந்தது. குடும்ப உறுப்பினர்கள் யாருமில்லாமல் தனிமையில் வாழ்ந்துவந்த அந்த முதியவர் தினந்தோறும் காலை மாலை வேளைகளில் அங்கு சுற்றித்திரியும் புறாக்கூட்டத்திற்கு உணவும் தண்ணீரும் வைத்து வந்தவராம். அந்தக் கூட்டத்துப் புறாக்களில் ஒன்றுதான் தன் எஜமானனைத் தேடி தினமும் மருத்துவமனைக்கே வந்து சென்றுள்ளது.
நீதி: அவரவர் செய்த செயல்களின் பலனை ( நன்மையோ & தீமையோ) அனுபவிக்காமல் யாருமே இந்தப் பூமியை விட்டுப் போய்விட முடியாது.
தீதும் நன்றும் பிறர்தர வாரா…
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...