அரசுப் பள்ளிக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சிப் பிரதிநிதி மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டது.
இதுதவிர பள்ளிகளில் எஸ்எம்சி கூட்டம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு பள்ளி வளர்ச்சிக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பு ஜூன் மாதத்துக்கான கூட்டம் இன்று (ஜூன் 9) நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே கோடை வெயில் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த எஸ்எம்சி குழு கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...