திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்:தீவினையச்சம்
குறள் :207
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
விளக்கம்:
எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.
A little string will tie a little bird
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே ஊக்கமுடன் எனது வேலைகளை செய்வேன்.
2. முயன்றால் பட்டாம்பூச்சி. இல்லாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.
பொன்மொழி :
இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறது என பார்ப்பதைவிட எப்போதும், எவ்வளவு தொலைவு கடந்து வந்திருக்கிறீர்கள் என பாருங்கள். இந்த வேறுபாடு எத்தனை எளிதானது என்பது உங்களை வியப்பில் ஆழ்த்தும்”- ஹெய்டி ஜான்சன்.
பொது அறிவு :
1. நோபல் பரிசை வென்ற முதல் இந்தியர் யார்?
2. டெல்லியில் செங்கோட்டையை கட்டிய முகலாய பேரரசர் யார்?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
ஜூலை 04
மேரி க்யூரி அவர்களின் நினைவுநாள்
மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903, 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்
நீதிக்கதை
இரண்டு மரம்!
ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரம் இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி, மரத்திடம் கேட்டது. 'மழை காலம் தொடங்க இருப்பதால், நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க
முடியுமா? 'என்றது. முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது.
குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம், அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது, "எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய்' என்றது.
அதற்கு மரம் கூறிய பதில்
'எனக்கு தெரியும் நான் வலுவிழந்து விட்டேன். எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன். தண்ணீரில் அடித்து செல்லபடுவேன். நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன்," மன்னித்து விடு என்றது.
உங்களை யாரும் நிராகரித்தால் அவர்களை தவறாக நினைக்காதீர்கள்
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...