இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில குழு கூட்டம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச்செயலர் பிரபாகரன் தலைமையில், சென்னையில் நடந்தது.
இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்; பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என்பதை, கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டம், உயர்கல்வியில், 7.5 சதவீத ஒதுக்கீடு, புதுமைப் பெண் திட்டம் போன்றவை, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
கற்பித்தல் பணியை பாதிக்கும் வகையில் உள்ள, 'எமிஸ்' தொடர்பான பணிகளை நிறுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலான, தேவையற்ற பதிவேடு பராமரிப்பை கைவிட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், மாநிலம் முழுதும் விரைவில் போராட்டம் நடத்தப்படும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, அக்டோபரில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எந்தெந்த சங்கங்கள் அண்ணா?
ReplyDelete