Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.01.2024

     

நார்வே
திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : துறவு

குறள்:343

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

விளக்கம்:

 ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றை யெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.


பழமொழி :

Many a slip between the cup and the lip

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டொழுக்க பண்புகள் :1

1.முயற்சியும், தொடர் பயிற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.

2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்தும் , தொடர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டும் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு தன்னை உயர்த்திக் கொள்வேன்.

பொன்மொழி :

ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள். அம்பேத்கர்

பொது அறிவு :

1. முயல் எந்த நாட்டின் தேசிய விலங்கு?

விடை: நார்வே 

2. எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன?

விடை: ஆறு கால்கள் 

English words & meanings :

 Quiet - silence. அமைதி

Quite - very (the exam is quite hard). முற்றிலும்.

ஆரோக்ய வாழ்வு : 

அகத்தி கீரை: சித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது. அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து,  இரும்புச் சத்து, வைட்டமின்(உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.

நீதிக்கதை

 தற்பெருமை வேண்டாம்


காட்டில் சிங்கம் அயர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தது. அப்பொழுது, அதன் அருகே உள்ள மரக்கிளையில் ஒரு சேவல் ஏறி அமர்ந்திருந்தது.

அதுவரை சும்மா இருந்த சேவல் "கொக்கரக்கோ" எனக் கூவ ஆசைப்பட்டு, உடன் சத்தமாகக் கூவியது.

சேவலின் கொக்கரக்கோ சத்தம் கேட்டதும், நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்த சிங்கம் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தது.

ஒருவரையும் காணவில்லை. ஆதலால் மறுபடியும் படுத்துத் தூங்கியது. சிங்கம் படுத்துத் தூங்கிய சிறிது நேரத்தில் மறுபடியும் சேவல் கூவியது.

சேவலின் சத்தத்தில் சிங்கத்தால் தூங்க முடிய வில்லை. கலவரமடைந்து எழுந்த சிங்கம், மரத்தின் மேலே பார்த்தது. சேவல் பெருமையுடன் நின்று கொண்டு இருந்தது.

"ஏய், ஏன் இப்படி காட்டுத் தனமாகக் கத்துகிறாய் என் தூக்கத்தைக் கெடுக்காதே" என எச்சரிக்கை செய்தது

"நான் எவ்வளவு அழகாகப் பாடுகிறேன். என் பாட்டு உனக்குப் பிடிக்கவில்லை என்கின்றாயே. நான்

இன்று மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். அதனால் பாடிக் கொண்டு தான் இருப்பேன் என்றபடி மீண்டும் கொக்கரக்கோ என அதிக சப்தத்துடன் கூவியது.

அதன் சப்தம் சிங்கத்தின் காதில் மிகவும் கொடூரமாக விழுந்ததால், இனிமேல் என்ன சொன்னாலும் சேவல் கேட்காது என்ற முடிவெடுத்து, இடத்தை மாற்றிக் கொள்வோம் என முடிவு செய்து ஓடியது.

சிங்கம் ஓடும் பொழுது ஒரு கழுதையைப் பார்க்காமல் ஓடியது. ஆனால் கழுதையோ, "சிங்கம் தன்னைக் கண்டு தான் பயந்து ஓடுகிறது" எனக்கூறி கத்தியது.

சிங்கம் காதில் இது விழுந்தவுடன், திரும்பி வந்து கழுதையைத் தாக்கிக் கொன்றது.


நீதி: வீணான தற்பெருமை மனதில் எண்ணக் கூடாது. அப்படி எண்ணுபவர் வேதனை அடைவார்கள்.

இன்றைய செய்திகள்

29.01.2024

*பீகாரின் முதல் மந்திரியாக நிதீஷ்குமார் பதவி ஏற்றார். அவர் ஒன்பதாவது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்கிறார்.

*தமிழகத்தில் 30ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்- வானிலை ஆய்வு மையம் தகவல்.

*உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலான 'ஐ கான் ஆப் தெ சீஸ்' தனது முதல் பயணத்தை தொடர்ந்தது. இதில் 20 தளங்கள் ஈபில் டவர் கோபுரத்தை விட உயரம் கொண்டது.

*இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அபார வெற்றி.

*கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு பளுதூக்குதல்:
களரிப்பட்டு பந்தயத்தில் தமிழக வீரர் சுர்ஜித்துக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

Today's Headlines

*Nitish Kumar took office as the Chief Minister of Bihar.  He assumes the post of Chief Minister for the ninth time.

 *Dry weather will prevail in Tamil Nadu till 30th - Meteorological Department's information.

 *The world's largest luxury cruise ship 'Icon of the Seas' continued its maiden voyage.  20 stories, taller than the Eiffel Tower; it is a very modernized luxury cruise.

 *England won the first Test match against India.

 *Khelo Indian Youth Sports Promotion:
 Tamil Nadu's Surjith won the silver medal in the Kalaripattu race.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive