ஜெசி ஓவன்ஸ் |
பால் :பொருட்பால்
அதிகாரம்: நட்பு
குறள் எண் :783
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
பொருள்: பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.
Laughter is the best medicine.
இரண்டொழுக்க பண்புகள் :
1. வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்
2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.
பொன்மொழி :
தினசரி கடமைகளைத் திட்டமிட்டு
ஒழுங்காக செய்து வந்தால்
வெற்றியும் தைரியமும்
தொடர்ந்து கிட்டும்.
- மால்ட்ரிக்
பொது அறிவு :
1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
ஞானபீட விருது.
2. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?
ஐரோப்பா.
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
ஒரு உழவு மழை :
‘பொதுவாக ஊர்ப்புறங்களில் மிக அதிகமாக 5 செ.மீஅளவுக்கு மழை பெய்தால் ஒரு உழவு மழை என சொல்வது உண்டு.
செப்டம்பர் 12
நீதிக்கதை
வித்தியாசாகரரை நூலால் வென்றது!
ஒரு சமயம் வித்தியாசாகரர் என்னும் பண்டிதர் ஒருவர் ஒரிஸாவிலிருந்து விஜய நகரத்துக்கு வந்து கிருஷ்ணதேவராயரின் ஆஸ்தான புலவர்களை வாதப்போட்டிக்கு அறைகூவியழைத்தார்.
கிருஷ்ணதேவராயரின் அவையில் பெத்தண்ணா, திம்மண்ணா, சூரண்ணா முதலான ஏழு பெரும் புலவர்கள் இருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலையில் மட்டுமே திறமை உள்ளவர்கள். ஆகையால் சகலகலா வல்லவராகவும், சகல விதமான சாஸ்திரங்களையும் கற்றறிந்தவருமான வித்தியாசாகரரை வெல்ல முடியாதென நினைத்துக் கவலையுடன் தலை கவிழ்த்தார்கள்.
ஆனால் தெனாலி ராமன் துள்ளியெழுந்து, மறுநாள் வித்தியாசாகரரை போட்டியிட வரும்படி ஏற்பாடு செய்தார் . மறுநாள் அரசவைப் புலவர்கள் எல்லோரும் தன்னைப் புடைசூழ்ந்துவர ஆஸ்தான புலவர்களின் தலைமைப் பண்டிதனைப் போல் தெனாலிராமன் வேடமிட்டுக் கையில் பட்டுத் துணியால் சுற்றப்பட்ட மூட்டை போன்ற ஒன்றை எடுத்துக்கொண்டு விவாத மண்டபத்திற்கு வந்தான்.
அந்த மூட்டையை உற்று நோக்கிய வித்தியாசாகரர், “இது என்ன புத்தகம்?” என்றார். அதற்குத் தெனாலிராமன், “இதன் பெயர் திலகாஷ்ட மகிஷபந்தனம். நாளை இதன் உள்ளடக்கத்தைப் பற்றி நாமிருவரும் ஆழ்ந்து விவாதித்துப் போட்டியிடலாம் என்னை அந்த விவாதத்தில் வெல்ல முடியுமென்ற தைரியமிருந்தால் நாளை இங்கு வாரும்!” என்றான் தெனாலிராமன் கம்பீரமாக.
தாம் கேள்விப்படாத புத்தகமாயிருக்கிறதே என்று விழித்து வித்தியாசாகரர், அன்றிரவு முழுவதும் எவ்வளவோ சிந்தித்தும் “திலகாஷ்ட மகிஷபந்தனம்” என்பதின் உட்பொருள் அவருக்கு விளங்காததால் அவமானத்திற்கு அஞ்சி பொழுது விடிவதற்குள் சொல்லிக் கொள்ளாமலே விஜயநகரத்தை விட்டு ஓடிவிட்டார்.
மறுநாள் அதையறிந்த அரசரும் , அரசவைப் புலவர்களனைவரும் தெனாலிராமனைப் புகழ்ந்து, “இராமா! உன் கையிலிருக்கும் புத்தக மூட்டையை அவிழ்த்துக் காட்டு! அதில் நீ இருப்பதாகக் கூறிய திலகாஷ்ட மகிஷபந்தனம் என்பது எவரும் கேட்டறியாத வினோதமான நூலாயிருக்கிறதே?” என்றனர்.
பட்டுத்துணியால் மூடப்பட்டதிருந்தா அதைப்பிரித்த கிருஷ்ணதேவராயர், அதிலுள்ள எள், விறகு, எருமை கட்டும் கயிறு முதலானவற்றைக் கண்டு திடுக்கிட்டார். தெனாலிராமன் அமைதியாக “அரசே! எள்ளுக்குத் திலகமென்று மற்றொரு பெயருண்டு; காஷ்டம் என்றால் விறகு மகிஷபந்தனம் என்றால் எருமை கட்டும் கயிற்றால் கட்டப்பட்டிருக்கிறது என்று பொருள்.
இந்த உட்பொருளை உணரமுடியாமல் வித்தியாசாகரர் ஓடியதில் சிறிதும் ஆச்சரியமில்லை!” என்று சிரித்தார் . சபையும் கொல்லென்று சிரித்தது. அரசரிடம் தெனாலிராமன் ஒரு பொன்முடிப்பைப் பரிசாகப் பெற்றுக்கொண்டார் .
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...