Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.11.2024

 

  

 இந்திய அரசியல் சாசன தினம்





திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

குறள் எண்:841

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை
இன்மையா வையாது உலகு.

பொருள்:அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம்
அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

பழமொழி :

சாது மிரண்டால் காடு இடம் கொள்ளாது. 

Even a forest will not hold their wrath when the meek are enraged.

இரண்டொழுக்க பண்புகள் :  

  * நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.                       

  *நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.

பொன்மொழி :

படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு அடிப்படை கருவியாகும்

–ஜோசப் அடிசன்

பொது அறிவு : 

1. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?

விடை: பன்னா. 

2. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்?

விடை: ஜவஹர்லால் நேரு


English words & meanings :

 Grief - துக்கம்,

 Guilty - குற்ற உணர்ச்சி

வேளாண்மையும் வாழ்வும் : 

கரிமம் அல்லாத பூச்சிக் கொல்லிகளை சமாளிக்க ஒரு வழி தாவரத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதாகும். காரணம், ஆரோக்கியமான தாவரங்கள் தமது இலைப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி அரிப்புக்கு உள்ளானாலும், அவற்றால் சமாளித்துக் கொள்ள முடியும்.

நவம்பர் 26

இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) அல்லது சட்ட தினம்(Law Day) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக  அனுசரிக்கப்பட்டது. மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கர் அவர்களை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும்   இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் துவக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

 பெற்றோர்


ரப்பரை பார்த்து பென்சில், "ஒவ்வொரு முறையும் நான் செய்த தவறுக்கு என்னை சுத்தப்படுத்தி தூய்மையாக்கி விடுகிறாய். ஆனால் என்னை சுத்தப்படுத்தும் பொழுது நீ குறைந்து கொண்டே செல்கிறாய். அது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று கூறியது.


 அதற்கு ரப்பர், "அது என் கடமை நான் படைக்கப்பட்டதே அதற்காகத்தான். என்னைக் கண்டு நீ வருத்தப்பட வேண்டாம். இதில் எனக்கு மிக மகிழ்ச்சியே. என்னால் உன் தவறுகள் அளிக்கப்பட்டு நீ முன்னேறிச் சென்றால்  அதுவே என் வெற்றி. நான் கரைவதை பற்றி எனக்கு கவலை இல்லை" என்று கூறியது.


அந்த ரப்பர் வேறு யாரும் இல்லை நமது பெற்றோர் தான். அவர்கள் தான் ஆயுள் முடியும் வரை நமது தவற்றை திருத்திக் கொண்டே இருப்பார்கள்.நம் மீது பொறாமை படாத உள்ளங்கள் நம் பெற்றோர்களே.

இன்றைய செய்திகள்

26.11.2024

*தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9-ல் கூடுகிறது: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு.

 *நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்குஇன்று ‘ரெட் அலர்ட்’: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

* எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு.

* 2023-ல் ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் படுகொலை: ஐ.நா அதிர்ச்சி அறிக்கை.

* உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது.

* டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆண்கள் பிரிவில் நெதர்லாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Today's Headlines

* Tamil Nadu Assembly to meet on December 9: Speaker Appavu announces.

* ‘Red alert’ for Delta districts, including Nagapattinam and Tiruvarur, was announced today by the Meteorological Department.

* Opposition parties in turmoil: Both houses of Parliament adjourned for the whole day.

* On average, 140 women and girls murdered per day in 2023: UN report in shock.

* World Chess Championship - began in Singapore yesterday.

* Italy defeated the Netherlands in the men's Davis Cup tennis category to win the championship.
 Prepared by

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive