அரசு
கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும்
ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு இன்று
முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் (டி பிரிவு ஊழியர்கள் தவிர) நலன் கருதி பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு ஜூலை 15 (இன்று) முதல் 24-ம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் www.nonteaching.dcetransfer.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...