Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகள் நிறைவு: சுய கணக்கெடுப்பு தளத்தில் 10.61 லட்சம் குடும்பங்கள் விவரம் சமர்ப்பிப்பு

hindutamil-prod%2F2026-09-01%2Fquduue38%2F18 
மக்​கள்​தொகைக் கணக்​கெடுப்பு என்​பது நாட்​டின் எதிர்​கால வளர்ச்​சி​யைத் திட்​ட​மிடு​வதற்​கான மிக முக்​கிய அடிப்​படைத் தரவு ஆதா​ர​மாகும்.
 

கல்​வி, சுகா​தா​ரம், வேலை​வாய்ப்​பு, வீட்டு வசதி போன்ற மக்​களின் அடிப்​படைத் தேவை​களுக்​கான அரசுத் திட்​டங்​களை வடிவ​மைப்​பது மற்​றும் அடிப்​படை வசதி​களை மேம்​படுத்​து​வதை நோக்​க​மாக கொண்​டு, இந்​தி​யா​வில் முதல்​கட்ட மக்​கள்​தொகைக் கணக்​கெடுப்பு (வீடு​கள் பட்​டியலிடு​தல்) கடந்த ஏப். 1-ம் தேதி அதி​காரப்​பூர்​வ​மாகத் தொடங்​கியது.தமிழகத்​தில் முதல்​கட்ட கணக்​கெடுப்​பான களப்​பணி​கள் ஆக. 1-ம் தேதி முதல் தொடங்​கியன. வீடு வீடாகச் சென்று கணக்​கெடுப்பு நடத்​து​வதற்கு

முன்​ன​தாக, நடப்​பாண்​டில் ஜூலை 17 முதல் 31-ம் தேதி வரை சுய கணக்​கெடுப்​புக்​கான தளம் உரு​வாக்​கப்​பட்​டது. இதன்​மூலம், குடி​யிருப்​பாளர்​கள் தங்​கள் குடும்ப விவரத்தை அதி​காரப்​பூர்வ மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு இணை​யதளம் வழி​யாக சமர்ப்​பிக்க வழி​வகை செய்​யப்​பட்​டது.

முதல்​கட்ட கணக்​கெடுப்பு பணி​களில் நகர்ப்​புறம் மற்​றும் கிராமப்​புறங்​களில் 1.15 லட்​சத்​துக்​கும் அதி​க​மான கணக்​கெடுப்​பாளர்​களும் 19 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான மேற்​பார்​வை​யாளர்​களும் ஈடு​படுத்​தப்​பட்​டனர். கணக்​கெடுப்பு பணி​யின்​போது, கணக்​கெடுப்​பாளர்​கள் 33 முக்​கியக் கேள்வி​களுக்கு பதில்​களை சேகரித்​தனர். இப்​பணி​கள் நேற்​றுடன் நிறைவடைந்​தன.

இதுகுறித்​து, தமிழகம் மற்​றும் புதுச்​சேரிக்​கான மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு இயக்​குநர் எம்​.சுந்​தரேஷ்​பாபு கூறிய​தாவது: மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு முதல்​கட்​டத்​தில் சுமார் ஒன்​றரை லட்​சம் பேர் பணி​யில் ஈடு​பட்​டனர்.

இப்​பணியை எவ்​விதத் தடங்​கலுமின்றி நிறைவு செய்​வதை உறு​தி​செய்த அனைத்​துக் கணக்​கெடுப்​பாளர்​கள், மேற்​பார்​வை​யாளர்​கள், நிர்​வாகப் பணி​யாளர்​களின் அர்ப்​பணிப்​பு, முயற்​சிகளுக்கு பாராட்​டு​கள்.

மக்​கள்​தொகைக் கணக்​கெடுப்​புக்​கான இந்த முக்​கி​யத் தரவு சேகரிப்​புப் பணிக்​காக அளிக்​கப்​பட்ட விலை ம​திப்​பற்ற ஆதர​வுக்​கும், ஒத்​துழைப்​புக்​கும் மக்​கள், மாநில அரசு உள்பட அனை​வருக்​கும் பாராட்​டு​களை தெரிவிக்​கிறோம்.

ஜூலை 17-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சுய கணக்​கெடுப்பு தளத்​தில் 10.61 லட்​சம் குடும்​பங்​கள் தங்​கள் விவரங்​களை சமர்ப்​பித்​துள்​ளன. முதல்​கட்ட கணக்​கெடுப்பு நிறைவடைந்​துள்ள நிலை​யில், தொழில்​நுட்ப தரவு​களை இணைக்​கும் பணி ஒரு சில நாட்​கள் நடை​பெறும்.

1948-ம் ஆண்டு மக்​கள்​தொகைக் கணக்​கெடுப்​புச் சட்​டத்​தின்​படி, இந்த செயல்​பாட்​டின் போது சேகரிக்​கப்​படும் அனைத்​துத் தனி​நபர்​ பதில்​களும்​ ரகசி​ய​மாக வைக்​கப்​படும்​. இரண்​​டாம்​ கட்​ட​மான மக்​கள்​ தொகைக்​ கணக்​கெடுப்​பு அடுத்​த ஆண்​டு ஜனவரி, பிப்​ர​வரி ​மாதங்​களில்​ ​நாடு முழு​வதும்​ மேற்​கொள்​ளப்​படும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive