இயல் : அரசியல்
அதிகாரம்:53. சுற்றந் தழால்
குறள் எண்:521
குறள்:
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
பொருள்:
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
Tomorrow never comes.
கடந்து போன காலம் கரணம் போட்டாலும் வராது
இரண்டொழுக்க பண்புகள் :.
1. என்னால் முடிந்த வரை இயற்கையை பாதிக்காத வகையில் நடந்துகொள்வேன் .
2. என் பகுதியைச் சுற்றியுள்ள நீர் நிலைகளை அசுத்தப் படுத்தாமல் பாதுகாப்பேன்.
பொன்மொழி :
"உண்மையை உரக்கச் சொல்லும் துணிவே பத்திரிகைத்துறையின் பெருமை; உண்மையை மதித்துப் பாதுகாப்பதே ஜனநாயகத்தின் வலிமை!”
Thought for the Day :
"The pride of journalism; respecting and protecting the truth is the strength of democracy.”
பொது அறிவு :
1. இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வெளியிடுவது யார்?
RBI(Reserve Bank of India).
2. GST- யின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
புதுடெல்லி.
English words :
1. Scarce – Rare – அரிதான
2. Impartial – Unbiased – பாரபட்சமற்ற
புவியியலும் சுற்றுசூழலும் :
இறுதியாக வெப்பமண்டல உலர் பசுமை மாறாக் காடுகள்
* கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் காணப்படும்.
* ஒப்பீட்டளவில் வறண்ட காலநிலையிலும் பசுமையாக இருக்கும் மரவகைகள் காணப்படும்.
* காணப்படும் இடங்கள்: தமிழ்நாட்டின் கொரமண்டல் கடற்கரைப் பகுதி; புதுச்சேரிக்கு அருகிலுள்ள சில பகுதிகளிலும் இவ்வகைக் காடுகள் உள்ளன.
NMMS :
MAT
கீழ்க்காணும் படத்தில் உள்ளவற்றில நீர் பிம்பம் எது?
விடை : (2)
நீதிக்கதை
## மெளனமாக நடந்த துரோகம்
நம்பிக்கை , நட்பு மற்றும் துரோகம் பற்றிய நீதிக்கதை .
ஒரு ஊரில் அர்ஜுன், கவின் என்ற இரு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். இருவரும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். தங்களுடை ய மகிழ்ச்சி, துக்கம், இரகசியங்கள் என அனைத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். அர்ஜுன் கவினை மிகவும் நம்பினான். கவின் எந்தப் பிரச்சினையில் இருந்தாலும் அர்ஜுன் அவனுக்கு உதவி செய்வான்.
ஒருநாள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அறிவிக்கப்பட்டது. இருவரும் அதில் கலந்து கொள்ள முடிவு செ ய்தனர். அர்ஜுன் மிகவும் சிரமப்பட்டு ஒரு புதிய அறிவியல் படை ப்பை உருவாக்கினான். தனது படைப்பின் அனைத்து விவரங்களையும் நம்பிக்கையுடன் கவினிடம் பகிர்ந்து கொண்டான்.
ஆனால் கவினுக்கோ எப்படியாவது முதல் பரிசு வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நண்பனின் நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு, அர்ஜுனின் படைப்பை அப்படியே நகலெடுத்து, அது தன்னுடைய சொந்தப் படைப்பு என்று கூறி கண்காட்சியில் சமர்ப்பித்தான்.
இதைக் கண்ட அர்ஜுன் மிகவும் அதிர்ச்சியடைந்தான். தன்னைப் போலவே நம்பிய நண்பன் இப்படித் துரோகம் செய்வான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை .
சில நாட்களுக்குப் பிறகு ஆசிரியர் உண்மையைக் கண்டுபிடித்தார். கவினின் தவறு அனைவருக்கும் தெரியவந்தது. அவன் பரிசை இழந்ததோடு மட்டுமல்லாமல், நண்பர்களின் நம்பிக்கையையும் இழந்தான். தன் தவறை உணர்ந்த கவின், அர்ஜுனிடம் சென்று மன்னிப்புக் கேட்டான்.
அப்போது அர்ஜுன் அவனிடம்,
"ஒரு போட்டியில் வெற்றி பெ றுவதற்காக நீ செய்த துரோகம் உனக்கு ஒரு பரிசைத் தரலாம் என்று நினைத்தாய். ஆனால், உன்னை உண்மையாக நம்பிய ஒரு நண்பனின் நம்பிக்கையை இழந்துவிட்டாய். பொய்யால் வெற்றியைப் பெறலாம்; ஆனால் உண்மையான மரியாதையையும் நம்பிக்கையையும் ஒருபோதும் பெற முடியாது" என்றான்.
கவின் தனது தவறை உணர்ந்து வருந்தினான். ஆனால் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது.
நீதி:
* நம்பிக்கையை உருவாக்க நீண்ட காலம் ஆகும்; அதை உடைக்க ஒரு நொடி போதும்.
இன்றைய செய்திகள்









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...