Text Books / Guides / Study Materials Download
முதன்மை தேர்வில் பிராந்திய மொழிகளுக்கு அனுமதி : யூ.பி.எஸ்.சி., அறிவிப்பு
யூ.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் தேர்வுகளில்
முதன்மை தேர்வை தங்களின் பிராந்திய மொழிலேயே தேர்வாளர்கள் எழுத அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே எழுத
வேண்டும்
என மார்ச் 5ம் தேதி யூ.பி.எஸ்.சி.,
அறிவித்திருந்ததற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து எழுந்த கடுமையாக
எதிர்ப்பை அடுத்து யூ.பி.எஸ்.சி., தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாக
கூறப்படுகிறது.
நுழைவுத்தேர்வுகளுக்கு உதவும் ஆன்லைன் தேர்வுகள்!
நேரம் நிர்ணயித்து எழுதிப்பார்க்கும் தேர்வுக்கு முந்தைய மாதிரித்
தேர்வுகள், உங்களின் சுய மதிப்பீட்டிற்கு சிறந்த அளவுகோல்களாக திகழ்கின்றன.
தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு
தொடக்கக்கல்வித்துறையில் 20.03.2013 அன்று உள்ளபடி ஊராட்சி ஒன்றியம்/
நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள
ஆசிரியர் பணியிட விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் 26.03.2013 அன்று
தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறும் கூட்டத்தில் சமர்பிக்க
தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன . மேலும் இதேபோல் பள்ளிக்கல்விதுறையிலும் தகவல்
கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"அரசு துறை தேர்வுகளில் இனி தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்"
"அரசுத் துறைகளில், தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து,
புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, இனி, தேர்ச்சி சதவீதம்
அதிகரிக்கும்" என, டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் நடராஜ் கூறினார்.
.
உயிரியல், வரலாறு தேர்வு: 36 மாணவர்கள் சிக்கினர்
பிளஸ் 2 உயிரியல், வரலாறு தேர்வுகளில், 36 மாணவர்கள், "பிட்" அடித்து
பிடிபட்டனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று, உயிரியல், வரலாறு, தாவரவியல்,
வணிகக் கணிதம் ஆகிய தேர்வுகள் நடந்தன.
தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகள் என்னென்ன?
இந்த 2013-14 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கென 16,965 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 2013-14ம் நிதியாண்டிற்கான,
தமிழக பட்ஜெட், மார்ச் 21ம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல்
செய்தார். அதில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு கல்வித்
துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விபரங்கள்,
தமிழக அரசு பட்ஜெட் 2013-14: பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கீடு
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி
ஜெனீவா: ஐ.நா., வில் மனித உரிமைகள் கழகத்தில் இலங்கைக்கு
எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றது. இதில் தீர்மானத்துக்கு
ஆதரவாக 25 நாடுகளும், தீர்மானத்திற்கு எதிராக 13 நாடுகளும் ஓட்டுப்போட்டன. 8
நாடுகள் பங்கேற்கவில்லை. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா
ஓட்டுப்போட்டது.
பகுதி நேர கணினி ஆசிரியர்கள் அரசு துறை தேர்வுகளை எழுதலாமா?
எழுதலாம். அரசு பணியே கிடைக்காதவர்கள் கூட தம் வீட்டு முகவரியை கொண்டு துறை தேர்வுகளை எழுதலாம்.
பகுதி நேர ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் அல்லது தொடக்க கல்வி துறை எனில் உதவி தொடக்க கல்வி அலுவலர் அனுமதியுடன் துறை தேர்வுகளை எழுதலாம். பின்னர் முழு நேர பணியாளராக ஆனதும் பணிப்பதிவேடு துவங்கிய பின்னர் அதில் தங்கள் துறைதேர்வு முடிவுகளை பதிவு செய்து கொள்ளலாம்.
குரூப்-1 தேர்வு வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கை
"தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் -1 தேர்வுக்கான
வயது வரம்பை, 45 ஆக உயர்த்த வேண்டும்" என, மார்க்., கம்யூ., கட்சி
கூறியுள்ளது.
தமிழ் மொழித்தாள் தேர்வு: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு
பாகிஸ்தான் சிறுமி மலாலா பிரிட்டன் பள்ளியில் சேர்ப்பு
சத்துணவில் விதவிதமான உணவு விநியோகம்: மாணவர்கள் உற்சாகம்
சத்துணவில், விதவிதமான உணவு வகைகள் வழங்கும் திட்டம், மாவட்டத்திற்கு
ஒரு இடம் என, தமிழகம் முழுவதும், 32 இடங்களில் முன்னோடித் திட்டமாக
தொடங்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
ஜெனிவா மனித உரிமை கவுன்சில் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக தீர்மானம்
நிறைவேற்ற வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில், கல்லூரி மாணவர்கள், இலங்கை
தமிழர் முகாமை சேர்ந்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்ச் 21ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதை அடுத்து பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் அலுவலக தலைமையகத்தில் இருக்க உத்தரவு.
மார்ச் 21ஆம் தேதி தமிழக அரசு சட்டமன்றத்தில்
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதை அடுத்த துறை சார்ந்த அனைத்து விவரங்களும்
தாயாற்படுத்தி வைத்து கொள்ளவும், பட்ஜெட் நடக்கும் நாளன்று அனைத்து
இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆய்வு
அலுவலர்கள் அவர்களின் அலுவவலக தலைமை இடத்தில் இருக்க பள்ளிக்கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் அறிமுகம்
அரசு / ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் CCE
சார்பான பதிவேடுகள் மற்றும் மதிப்பெண் அட்டைகள் ஆகியவற்றில் ஆசிரியர்களின்
சுமையை குறைப்பது மற்றும் CCE செயல்திறன் பற்றி அறிய "BEE EDUSYS" என்ற
நிறுவனம் மூலம் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு மாவட்டத்திற்கு 2 அரசு
பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுத்து தமிழக முழுவதும் 64 பள்ளிகளுக்கு,
இச்செயல்திறன் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
10ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் மாற்றம்: பள்ளிகளுக்கு சுற்றறிக்கை
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, கணித வினாத்தாளில் ஏற்பட்டிருக்கும்
மாற்றம் குறித்த சுற்றறிக்கை, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
கற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்!..
நாம் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்கிறோம். கற்றல் செயல்பாடானது
24x7 என்ற தொடர்ந்த செயல்பாடாக நம் வாழ்வில் இடம்பெற்ற ஒன்று என்பதை
புரிந்துகொள்பவரே புத்திசாலி.
கல்வித்துறையில் விரைவில் 500 இளநிலை உதவியாளர் நியமனம்
பள்ளி கல்வித்துறையில், விரைவில், 500 இளநிலை உதவியாளர்கள், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
"போட்டி தேர்வுகளில் தமிழ் மொழியை புறக்கணிக்கவில்லை"
டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழியின்
முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது போல் பேசுவது தவறு. தமிழ் மொழியை
புறக்கணித்து, தமிழக அரசுப் பணிகளுக்கு, பணியாளர்களை தேர்வு செய்ய
முடியாது" என, புதிய பாடத்திட்டங்களை உருவாக்கிய முன்னாள் தலைவர் நட்ராஜ்
கூறினார்.
ஒரே நாளில் 2 அரசுத் தேர்வு: மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல்?
தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கான கடைசி தேர்வும்,
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் தேர்வும் ஒரே நாளில் நடக்கவுள்ளதால்,
பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேர்வு மையங்கள்
ஒதுக்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தலைமை ஆசிரியர்கள்
தெரிவிக்கின்றனர்.
மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள்: பள்ளி திறக்கும் நாளில் வழங்க நடவடிக்கை
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களை,
பள்ளி திறக்கும் நாளில் வழங்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து
வருகிறது.
ஏழாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என NMC (National Mazdoor Conference) பாரத பிரதமரை இன்று கேட்டுக்கொண்டுள்ளது
ஏழாவது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும் என NMC (National Mazdoor Conference) பாரத பிரதமரை இன்று கேட்டுக்கொண்டுள்ளது.
தலைவர் சுபாஷ் சாஸ்திரி இது தொடர்பாக
கூறுகையில் DA 50% மேல் சென்றுவிட்டதால் ஏழாவது ஊதியகுழுவை அமைப்பதில்
காலம் தாழ்த்தக்கூடாது மேலும் அடிப்படை சம்பளத்தில் 50% DA வை
இணைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார் .
பிளஸ் 2 இயற்பியல் தேர்வு ரத்து கிடையாது: தேர்வுத்துறை - Dinamalar
வேதியியல், கணக்கு பதிவியலில் 122 மாணவர் சிக்கினர்
இதுவரை நடந்த பிளஸ் 2 தேர்வுகளில், அதிகபட்சமாக, நேற்று நடந்த
வேதியியல், கணக்குப் பதிவியல் தேர்வுகளில், மாநிலம் முழுவதும், 122
மாணவர்கள், தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு, பறக்கும் படை குழுக்களிடம்
பிடிபட்டனர்.
பிளஸ் 2 இயற்பியல் தேர்வு கேள்வியில் குழப்பம்
பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் ஒரு கேள்வி ஆங்கிலத்தில் சரியாகவும்,
தமிழில் தவறாகவும் உள்ளதால், 5 மதிப்பெண்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ,
என மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
வேதியியல் வினாத்தாள் எளிது: சென்டம் அதிகரிக்கும்
பிளஸ் 2 வேதியியல் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது என்பதால், பிற
பாடங்களை காட்டிலும் வேதியியல் பாடத்தில், "சென்டம்" எடுக்கும் மாணவர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், பொறியியல், மருத்துவ மாணவர்களுக்கு,
எதிர்பார்க்கும் கட்- ஆப் மதிப்பெண் பெற, வேதியியல் தேர்வு ஓரளவு கை
கொடுக்கும், என்ற நம்பிக்கை உள்ளதாக, மாணவர்கள் தெரிவித்தனர்.
அரசு துறைத் தேர்வுகள் அறிவிப்பு: ஏப்ரல் 15 வரை விண்ணப்பிக்கலாம்
"அரசு ஊழியர்கள், அலுவலர்கள், துறைத் தேர்வுகளை எழுத, ஏப்ரல், 15ம் தேதி
வரை, "ஆன்-லைன்" வழியாக விண்ணப்பிக்கலாம்" என, டி.என்.பி.எஸ்.சி.,
அறிவித்துள்ளது.
புதிதாக 20 ஐ.ஐ.ஐ.டி.,கள்: மக்களவையில் மசோதா தாக்கல்
தற்போதுள்ள, நான்கு, ஐ.ஐ.ஐ.டி.,களுடன், மேலும், 20, இந்திய தகவல்
தொழில்நுட்ப கல்வி கழகங்களை துவக்க வகை செய்யும், மசோதா நேற்று,
லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
எம்.எஸ்சி., நர்சிங், எம்.பார்ம்., - எம்.பி.டி., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பள்ளிகளின் தரத்திற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்க வலியுறுத்தல்
"தனியார் பள்ளிகள் அனைத்திற்கும், ஒரே விதமான கட்டணங்களை
நிர்ணயிக்காமல், தரத்திற்கு ஏற்ப நிர்ணயிக்க வேண்டும்" என, தமிழ்நாடு
மாணவர் - பெற்றோர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
Salem Vinayga Mission University - M.Phil Not Eligible to Promotion or Incentive
சேலம் விநாயகா மிசன் பல்கலைகழகம் இது வரை தமிழக அரசின் ஒப்புதல் ஆணை பெறப்படவில்லை என்பதால், அதில் பயின்ற M.Phil பட்டம் மூலம் பதவி உயர்வு அல்லது ஊக்க ஊதிய உயர்வு பெற வழி வகை இல்லை என பள்ளி கல்வி இணை இயக்குனர் RTI மூலம் தகவல் அளித்துள்ளார்.
மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு அமைக்க வேண்டும் -அஜய் மகேன்
ஏழாவது ஊதிய குழு அமைக்கவேண்டும் என டாக்டர் மன்மோகன்சிங் அமைச்சரவையில்
முதல் குரலாக அஜய் மகேன் குரல் ஒலித்துள்ளது. மத்தியஅரசு ஊழியர்களுக்கு
7வது ஊதிய குழு அமைப்பது தற்போதைய சூழலில் தேவை எனவும் அதை
நடப்பாண்டிலேயே செய்யவேண்டும் எனவும் பாரத பிரதமரை யூனியன் மினிஸ்டர்
அஜய் மகேன் கேட்டுக்கொண்டுள்ளார்.
CTET July 2013 | மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு
click here to download the CTET Advertisement
click here to Apply Online
Important Dates:
Starting Date for Online Registration: 15-03-2013.
Closing Date for Online Registration: 16-04-2013.
Last Date for Receipt of Application: 22-04-2013.
Last Date for Receipt of Application (far flung areas): 29-04-2013.
Date of Written Examination: 28-07-2013.
தனித்தேர்வர்களுக்கு 22.03.2013 மற்றும் 23.03.2013 இல் செய்முறை தேர்வு
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் அனைத்தும் 27ம் தேதியுடன் நிறைவடைகிறது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 1 ஆம் தேதி துவங்கியது. தமிழகத்தில் 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் குரூப் 2
மற்றும்VAO தேர்வில் இருந்து பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப்
4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன.
அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1, குரூப்–1–ஏ, குரூப்–1–பி,
குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட தேர்வுகளுக்கும் இதர தொழில்நுட்ப
தேர்வுகளுக்கும் பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை
இலங்கை விவகாரத்தில் கலை, அறிவியல், சட்டம் மற்றும் வேளாண் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எம்பிஏ படித்துக் கொண்டிருக்கையில் செய்ய வேண்டியவை...
இன்றைக்கு எத்தனையோ பட்டப் படிப்புகள் இருக்கலாம். ஆனால், எம்பிஏ
படிப்புக்கென்று தனி மரியாதை இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில், இப்படிப்பை
முடித்துவிட்டால், எப்படியும் ஒரு நல்ல வேலை கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கைதான் அதற்கு காரணம்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் புதிய முறை: ஆங்கிலத் திறனுக்கு அவசியம் இருக்காது
அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் புதிய முறையை
பின்பற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதன்மை தேர்வில்
ஆங்கிலத் திறன் அவசியம் இல்லை; அந்த மதிப்பெண், இறுதித் தேர்வில்
சேர்க்கப்பட மாட்டாது என, எதிர்பார்க்கப்படுகிறது.
22ம் தேதி முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும்,
22ம் தேதி துவங்குகிறது. ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள்,
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.
TET Study Materials - 3rd Schedule
TET Study Material - 21
TET Study Material - 20
TET Study Material - 19
TET Study Material- 18
TET Study Material - 17
TET Study Mateial - 16
TET Physics Study Material - 15
TET Physics Study Material - 14
TET Study Material - 13
TET Physics Study Material - 12
TET Study Material - 11
TET Study Material - 10
TET Study Material -9
TET Study Material - 8
TET Study Material - 7
TET Study Material - 6
TET Study Material - 5
TET Study Material - 4
TET Study Material - 3
TET Study Material - 2
600க்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதும் மையங் களை உடனடியாக இரண்டாக பிரிக்க வேண்டும் - தேர்வுத் துறை அவசர உத்தரவு
பிளஸ் 2
தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கியது. மார்ச் 27ம் தேதியுடன் முடிகிறது.
இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 5769 பள்ளிகளில் இருந்து 8
லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ மாண வியரும், தனித் தேர்வர்களாக 48 ஆயிரத்து
788 மாணவ மாணவியரும் எழுதுகின்றனர்.
மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட
பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இது செல்லாது என
அறிவிக்கக்கோரி இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தனர்.
தேர்வு மைய அங்கீகாரம் பெறுவதில் தில்லுமுல்லு: விசாரணையில் அம்பலம்
நாமக்கல்லில், பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேடு தொடர்பாக,
பள்ளிக்கல்வித் துறையினர் விசாரணையில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி
வருகின்றன.
மாணவிகளுக்கு தற்காப்பு கலை: பீகாரில் மெகா திட்டம்
"பீகாரில், பள்ளி மாணவியர், 10 லட்சம் பேருக்கு, தற்காப்பு கலை பயிற்சி
அளிக்கப்படும்" என, அம்மாநில, கல்வி திட்ட குழு இயக்குனர் ராகுல் சிங்
கூறினார்.
நாமக்கல் தனியார் பள்ளியில் முறைகேடு: 1,300 அறை கண்காணிப்பாளர்கள் மாற்றம்
பிளஸ் 2 தேர்வில், நாமக்கல் தனியார் பள்ளியில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து, 1,300 அறை கண்காணிப்பாளர்கள், அதிரடியாக மாற்றப்பட்டனர்.
காலவரையற்ற விடுமுறை : பட்டமளிப்பு விழா ரத்து
இலங்கை தமிழர்களுக்காக மாணவர்கள் நடத்தும் போராட்டம்
எதிரொலியாக, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால்,
மதுரை அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டது.
நாகர்கோவில் ரயில்வே பிளாட்பாரத்தில் சிதறிய விடைத்தாள்கள்
நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் பிளஸ் 2
விடைத்தாள் சிதறிய சம்பவம் தொடர்பாக மாணவர்கள் பாதிக்காத வகையில் வீடியோ
காட்சிகள் மூலம் துல்லியமாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.









