Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிக்கு 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகள்: கல்வித்துறை டெண்டர்


         வரும், 2013-14ம் கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்காக, 9.67 லட்சம், ஜியாமெட்ரி பெட்டிகளை கொள்முதல் செய்ய, பள்ளி கல்வித் துறை, டெண்டர் வெளியிட்டுள்ளது.


எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ஜூன் முதல் வாரம் வெளியீடு


             "எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான மதிப்பெண் தர வரிசை பட்டியல், ஜூன் முதல் வாரம் வெளியிடப்படும்" என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


பொது கலந்தாய்வு எப்போது? கல்லூரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


            "கல்லூரி ஆசிரியர்களுக்கான, இட மாற்ற பொது கலந்தாய்வு தேதியை, உடனே அறிவிக்க வேண்டும்" என, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


கோடை கால பயிற்சி முகாம்: அறிவியல் மையம் ஏற்பாடு


           தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், கோடை கால பயிற்சி முகாம் துவங்குகிறது. மாணவர்களிடையே, அறிவியல் ஆர்வத்தை வளர்க்க, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பயிற்சிகளை நடத்துகிறது.


மாணவர் விடுதிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி


            தமிழகத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 160 விடுதிகளில் தங்கி, படிக்கின்றனர். இவர்களில், இளங்கலை முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின், ஆங்கில பேச்சு திறனை வளர்க்க, ஆங்கில பேச்சு பயிற்சி சிறப்பு வகுப்புகள் நடத்த, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முடிவு செய்தது.


குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு ஏப்.,29ல் கவுன்சிலிங்


               டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, இம் மாதம் 29ம் தேதி கவுன்சிலிங் நடக்கிறது.


தொடக்கக்கல்வித் துறை இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்து விண்ணப்பம் பெற தகவல் இன்று (26.04.2013) மாலைக்குள் வெளிவரும் - TNPTF-ன் மாநில பொதுச் செயலாளர் தகவல்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfwAsVykJ0AwS4HvfvF-NbWH921v14_3n1AIWErQGJ3mWTbHVqZK2-9dnSK6HFoFOKaSNfc6HoWVroSKOP9IIvn72VkKL0TDd7ZohufkpsWnuUS0OrDJ6d88Esa8khOo2XapSS3cNj2tJI/s1600/DEE+25.04+(1).gif          
            தொடக்கக்கல்வித் துறைக்கான 2013-14ஆம் ஆண்டிற்கான இட மாறுதல் மற்றும் பதவியுயர்வு கலந்தாய்வு குறித்து இதுவரை எந்த தகவலும் வராததால் ஆசிரியர்கள் மத்தியில் இதுகுறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு


              கோடை விடுமுறையின் போது பள்ளியின் கணினி, அச்சுப்பொறி, ப்ரொஜெக்டர், எல்.சி.டி மானிட்டர், மடிக்கணினி போன்ற விலையுயர்ந்த பொருட்கள் உங்கள் பள்ளியில் இருந்தால் அவற்றைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பும் தலைமையாசிரியரையே சாரும்.
 
 

கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்: முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம்

 
          "மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில், கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு, 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி : பரிசீலிக்க நாடாளுமன்ற குழு கோரிக்கை


             இந்தியாவில் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் 8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி பெற வைக்கும் திட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றக் குழு கோரியுள்ளது.

மே 9 முதல் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்


              தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 9 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
 
 

கல்வியாண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு


         கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியருக்கு, கல்வி ஆண்டு முடிய பதவி நீட்டிப்பு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
 
 
 

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?


          கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது.
 
 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55 பகுதி நேர ஆசிரியர் பணி விண்ணப்பம் வரவேற்பு


               கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, 55 பகுதி நேர ஆசிரியர் பணியிடம் நிரப்பபடுகிறது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
 
 

புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் திட்டம்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அறிமுகம்


              பாடப் புத்தகங்களைப் பார்த்து, பொதுத்தேர்வை எழுதும், புதிய வகை திட்டம், வரும் கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அமல்படுத்தப்பட உள்ளது. பொதுத் தேர்வுகள், மாணவர்களிடையே மன அழுத்தத்தை தருவதால், தேர்வு நடைமுறைகளில், படிப்படியாக, பல்வேறு சீர்திருத்தங்களை, மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
 
 

சிவில் சர்வீஸ் தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்


          சிவில் சர்வீஸ் தேர்வு கொள்கை விவகாரம் தொடர்பாக முதல்வர் ‌ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
 

சிந்திப்பதற்கு மட்டும் இந்தியாவில் வரி இல்லை: உயர்நீதிமன்ற நீதிபதி


           "சிந்திப்பதற்கு மட்டும் இந்தியாவில், வரி விதிக்கப்படுவதில்லை; இந்தியர்கள் தராளமாக சிந்திக்கலாம்," என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் பேசினார்.
 
 

உங்கள் எண்ணங்களை ஒளி ஓவியமாக்கும் புகைப்படத் துறை


             போட்டோகிராபி எனப்படும் புகைப்படக்கலை, ஒளியை படமாக பதிவு செய்து புகைப்படங்களை உருவாக்கும் கலை. படங்கள் என்பவை, சக்தி வாய்ந்த ஊடகம். அனைத்து இடங்களிலும், புகைப்படத்தின் பயன் உள்ளது.
 
 

பொறியியல் கல்லூரி தேர்ச்சி சதவீதம் வெளியிடக் கோரி வழக்கு


             பொறியியல் கல்லூரிகளின், மாணவர்கள் தேர்ச்சி சதவீதத்தை வெளியிடும்படி, அண்ணா பல்கலைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
 

தமிழ் வழியில் பி.எல்., பட்டம் பெற்றவர் சிவில் நீதிபதியாக தேர்வானது செல்லும்: உயர் நீதிமன்றம்


           "தமிழ் வழியில், பி.எல்., படித்த பெண்ணை, சிவில் நீதிபதியாக, தேர்ந்தெடுத்தது செல்லும்" என, சென்னை ஐகோர்ட், உத்தரவிட்டுள்ளது.
 
 

முதல் தலைமுறை பட்டதாரிகள் சுய தொழில் துவங்க அழைப்பு


            முதல் தலைமுறை பட்டதாரிகள், சுய தொழில் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆட்சியர் லில்லி வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் சார்பாக, முதல் தலைமுறை பட்டதாரிகள் தொழில் துவங்க, தமிழக அரசு, 25 சதவீத மானியத்தில், 5 லட்ச ரூபாய் முதல், ஒரு கோடி ரூபாய் வரை கடன் உதவி வழங்கி வருகிறது.

குரூப் 4ல் தேர்வானவர்களுக்கு திண்டுக்கல்லில் கலந்தாய்வு


           திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று(ஏப்.25ல்) கலந்தாய்வு நடக்கிறது.
 
 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கேள்விக்குறி


                காஞ்சிபுரம் மாவட்டத்தில், அங்கீகாரத்தை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ள 84 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் கிடைக்குமா அல்லது ரத்தாகுமா என்பது, வரும் ஜூன் மாதம், அரசு அறிவிப்புக்கு பின்னரே தெரியவரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 

பொறியியல் கலந்தாய்வு: தினமும் 4,500 பேரை அழைக்கத் திட்டம்


            "பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஒரு நாளைக்கு, 4,000 முதல், 4,500 மாணவர்களை, கலந்தாய்வுக்கு அழைக்க திட்டமிட்டுள்ளோம்" என, பொறியியல் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு ஆசை கூறி வலை விரிக்கும் மோசடி நிறுவனங்கள்


           வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி, ஆயிரக்கணக்கில் பண மோசடி செய்யும் தனியார் வேலைவாய்ப்பு (இடைநிலை) நிறுவனங்களால், பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
 
 

ஆசிரியர்களை மாணவர்கள் மறக்கக் கூடாது-தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர் சொக்கலிங்கம்


         மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வி தாய்நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயன்படும் படி வாழ வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமே, மாணவர்கள் தங்களை விட அதிகம் பணம் சம்பாதித்தாலும், சமுதாயத்தில் பெரிய மனிதர்களாக வளர்ந்தாலும் அவர்களை கண்டு பொறாமைப் படாமல், மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.
 
 

2013-14ஆம் கல்வியாண்டில் 400 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவக்கம்


                வரும் கல்வி ஆண்டில், 400 அரசு பள்ளிகளில், ஆங்கில வழியில் வகுப்புகள் துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 
 

ஆசிரியர்களை மாணவர்கள் மறக்கக் கூடாது-தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர் சொக்கலிங்கம்


             மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வி தாய்நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயன்படும் படி வாழ வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமே, மாணவர்கள் தங்களை விட அதிகம் பணம் சம்பாதித்தாலும், சமுதாயத்தில் பெரிய மனிதர்களாக வளர்ந்தாலும் அவர்களை கண்டு பொறாமைப் படாமல், மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.

2013-14ஆம் கல்வியாண்டில் 400 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவக்கம்


              வரும் கல்வி ஆண்டில், 400 அரசு பள்ளிகளில், ஆங்கில வழியில் வகுப்புகள் துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கையை அதிகப்படுத்த, 32 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகளிடம், பகுதி வாரியாக

கற்பித்தலில் புதிய அணுகுமுறை: ஓஎன்ஜிசி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


               காரைக்கால் மாவட்டம், நிரவியில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி. பொதுப் பள்ளியில் கல்வி கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உயர்கல்வி சீரழிவுக்கு நீதிமன்றமும் ஒரு காரணம்: சந்துரு


                 இந்திய அரசியல் சாசனத்தில் தொழில், வியாபாரம் போன்றவை ஒரு தனி மனிதனுக்கு அடிப்படை உரிமை சட்டமாக்கப்பட்டது. ஆனால், கல்வி அடிப்படை உரிமை சட்டமாக ஆக்கப்படவில்லை. 1991ம் ஆண்டில் ஒரு வழக்கின் தீர்ப்பில், "கல்வி தனி மனித உரிமை" என, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

563 இளநிலை உதவியாளர்களுக்கு ஏப்.25ல் பணியிட கலந்தாய்வு


            தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 563 இளநிலை உதவியாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பணியிடக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஏப்.25) நடைபெற உள்ளது.

தமிழ்நாடு திறந்த பல்கலை: பி.எட்., படிப்பிற்கான அறிவிப்பு


            தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வரும் கல்வியாண்டில் நிரப்பப்படுமா?


          அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம் உள்ளது. வரும் கல்வியாண்டிலாவது இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

வாசிப்பு, நேசிப்பு, யோசிப்பு, சுவாசிப்பு: உலக புத்தக தினம்


            கதை சொல்லிகள் இல்லாமல் போயிருந்தால், கடந்த காலங்கள் தெரியாமல் போயிருக்கும். புத்தகங்கள் இல்லை என்றால், நிகழ்காலம் கூட இறந்த காலமாய் மாறிவிடும். புத்தகங்கள் உயிரற்ற காகித குவியல்கள் அல்ல;

புதிதாக பாலிடெக்னிக் துவங்க அரசுக்கு எண்ணமில்லை


               "பாலிடெக்னிக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்க, அரசு உத்தேசிக்கவில்லை" என உயர்கல்வித் துறை அமைச்சர், பழனியப்பன் கூறினார்.

பொறியியல் கலந்தாய்வு: மே 4 முதல் விண்ணப்பம்


                "நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே, 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படும்" என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ், தெரிவித்தார். இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.

GOVT OF TAMILNADU - INSTRUCTIONS TO PENSIONERS

Announcement and forms  
1. Announcement :
Pensioners have to appear before the Pension Pay Officer/ 
Treasury Officer for mustering from 1st April 2013 to 30th June 2013
 on all Government working days. Pensioners who are unable to
 appear for mustering may produce Life Certificate in the format 
prescribed below.


தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களின் பணி சார்ந்த விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.


            தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 34351/ஏ1/இ4/2013, நாள். 19.04.2013-ன் படி தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் தொடக்கக் கல்வி இயக்குனரின் ஆளுகையின் கீழ் பணிபுரியும்  மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும்

விடுமுறையை வீணாக்க வேண்டாம்


             ஓய்வு என்றால் என்ன? எந்த வேலையும் செய்யாமல் "சும்மா' உட்கார்ந்திருப்பதுதான் ஓய்வு என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஓய்வு என்பது நாம் செய்து கொண்டிருக்கும் வேலையில் தவறு மற்றும் சலிப்பு

பகுதிநேர ஆசிரியர்களை சோதிக்கும் மே மாதம்: அரசு கருணை காட்டுமா?


              தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் வழங்க வேண்டும் என்று, பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில், பகுதி நேர ஆசிரியர்களாக உடற்கல்வி, தையல், ஓவியம் மற்றும் கணினி ஆசிரியர்கள் என, 15 ஆயிரம் பேரை அரசு நியமித்தது. இவர்கள், மாதத்தில் 12 அரை நாட்கள் பணியாற்றுகின்றனர்.

பகுதி நேர ஆசிரியர் பதவிக்கு முதல் விண்ணப்பம் வினியோகம்


             நாமக்கல் மாவட்டத்தில், 31 பகுதி நேர ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது" என, சி.இ.ஓ., குமார், கூடுதல் சி.இ.ஓ., கோபிதாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

 

பணி நியமன அறிவிப்பு முதல்வர் வெளியிடுவார்: நர்சரி ஆசிரியர்கள் நம்பிக்கை


             "தமிழக சட்டசபையில் மே 10ம் தேதி நடைபெறவுள்ள கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பணிநியமனம் குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார்," என நர்சரி பள்ளி ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மருத்துவ பணியாளர் தேர்வு திடீர் ஒத்தி வைப்பு மருத்துவர்கள் அவதி


                தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும், பொது, சிறப்பு மருத்துவர் மற்றும் பல் மருத்துவர்களுக்கான தேர்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டதால், மருத்துவர்கள் அவதிப்படுகின்றனர்.

வேலைக்கு தகுதியான பட்டதாரிகள் 30 சதவீதம் மட்டுமே: துணைவேந்தர் வேதனை


            காரைக்குடி அழகப்பா பல்கலை கழக இணைப்பு கல்லூரிகளின், முதல்வர்களுக்கான "தகவல் தொழில் நுட்பம் சார்ந்த கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் புதுமை" என்ற தலைப்பில், கருத்துப் பட்டறை, பல்கலைக்கழகத்தில் நடந்தது.

புதிய ஓய்வூதியத் திட்டம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன்?


                 புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் இதுவரை விவாதிக்காதது ஏன் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ.) தேசியக் குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன் கேள்வி எழுப்பினார்.

மொபைல் போனில் பாடங்கள் படிக்க வசதி அறிமுகம் செய்கிறது திறந்தநிலை பல்கலை


            எந்தவொரு இடத்தில் இருந்தும், மாணவர்கள் பாடங்களை படிக்கும் வகையில், முதன்முறையாக, மொபைல் போனில் பாடங்கள் படிக்கும் வசதியை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்

இ.பி.எப்., வட்டி 8.5 சதவீதம் நிதி அமைச்சகம் முடிவுஇந்த வாரம் தெரியும்


           தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்களுக்கு, 8.5 சதவீதம் வட்டி வழங்க, மத்திய நிதி அமைச்சகம் இந்த வார இறுதியில் அனுமதி வழங்கும் என தெரிகிறது. தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்ந்துள்ள சந்தாதாரர்களுக்கு, 2012-13ம் நிதியாண்டிற்கு, 8.5 சதவீதம் வட்டி

 

மகாவீர் ஜெயந்தி - தமிழகத்தில் விடுமுறை 23.04.2013 அன்றா? அல்லது 24.04.2013 அன்றா?


            மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் 23.04.2013 அன்று விடுமுறை  என்றும் மற்றும் நாட்காட்டியின் படியும் 23.04.2013 அன்று விடுமுறை என்றும் தகவல்கள் வருவதால் தமிழ்நாட்டில் விடுமுறை 23.04.13 அன்றா? 24.04.13 அன்றா? என்ற குழப்பம் ஆசிரியர்கள்/ அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 
 

மாநகராட்சி பள்ளிகளில் புது "சாப்ட்வேர்": கல்வித்தரத்தை பெற்றோர் அறிய வாய்ப்பு.


               கோவை மாநகராட்சி பள்ளிகளை ஒருங்கிணைக்கவும், மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் பிரத்யேக சாப்ட்வேர் நிறுவப்படுகிறது. இதன்மூலம், மாணவர்களின் கல்வித்தரத்தை வீட்டில் இருக்கும் பெற்றோரும் தெரிந்து கொள்ளலாம். 
 

டி.இ.டி., தேர்வில் மதிப்பெண் சலுகை: எஸ்.சி., - எஸ்.டி.,க்கு வழங்க கோரிக்கை


            "டி.இ.டி., தேர்வில், பி.சி., - எம்.பி.சி., - எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு தேர்வர்களுக்கு, மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும்" என, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது.
 
 

கணித மேதை சகுந்தலா தேவி காலமானார்


            மிக சிக்கலான கணக்குகளை சில நொடிகளுக்குள் தீர்த்து வைக்கும் 'மனித கம்ப்யூட்டர்' என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி, பெங்களூரில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 80.
 
 

ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா? ஏகப்பட்ட வழக்குகளால் டிஆர்பி திணறல் - தினகரன் நாளிதழ் செய்தி


            மாணவர்களின் குழப்பங்களை தீர்க்க வேண்டிய ஆசிரியர்களே குழம்பிப் போய் இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள். ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பில் தொடங்கிய குழப்பம், விண்ணப்ப விற்பனை, தேர்வு முறை, ரிசல்ட் வெளியீடு, அதற்குப் பிறகு படிப்பு தகுதி என தீராமல் தொடர்ந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த குளறுபடிகளால் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.

"சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விவசாய படிப்பு நல்ல தேர்வு"


             பிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள் விளக்கினர்.


கற்பனைத் திறன் இருந்தால் ஊடகத்துறையில் சாதிக்கலாம்


              பிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள் விளக்கினர்.


டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பாட திட்டம்: தமிழில் வெளியிட நடவடிக்கை


             டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், விரைவில், தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட உள்ளன.


கல்லூரி மாணவியருக்கு பெண் காவலர்கள் பாதுகாப்பு


           சென்னை பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் வரும் அனைத்து கல்லூரிகளிலும், மாணவியரின் பாதுகாப்பிற்காக, விரைவில் பெண் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


பயோ டெக்னாலஜியில் 25 படிப்புகள்: வல்லுனர்கள் விளக்கம்


             பிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள் விளக்கினர்.


மருத்துவப் படிப்புக்கு இணையான படிப்புகள்


           திண்டுக்கல்லில் நடைபெற்ற தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், "பிளஸ் 2 தேர்வில் 60 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறுபவர்களின் எதிர்காலம்" குறித்து ரமேஷ்பிரபா பேசியதாவது:


உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை


           "பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்" என, உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நடைபயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை


           தற்போதுள்ள காலகட்டத்தில் நடைப்பயிற்சி முக்கியமாகி நோயின்றி வாழ நடைப்பயிற்சி அவசியமான ஒன்றாகிவிட்டது இன்று. கீழ்காணும் முறையில் நடந்தால் நடைப்பயிற்சியின் முழுப் பயனையும் பெறலாம்.....
 
 
• நடைபயிற்சி செய்யும் போது நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கி தரையை பார்க்காமல் இருபது அடி முன்னோக்கியவாறு நடக்க வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலை: தொலைநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு


           அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி மையத்தில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
 
 

கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வு/தேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள்


*மதிப்பெண் பதிவேடு
*தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
*மக்கள் தொகை சுருக்கம்
*தேர்ச்சி சுருக்கம்
*5+ குழந்தைகள் பெயர்ப்பட்டியல்
*இடைநின்றவர் பெயர்ப்பட்டியல்/இன்மை அறிக்கை
*பள்ளியில்சேராதவர் பெயர்ப்பட்டியல்/ இன்மை அறிக்கை
*மாற்றுத்திறனாளிகள்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*குழந்தைதொழிலாளர்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*EER சுருக்கம்
*பள்ளி வேலை நாட்கள் விபரம் 
*கோடைவிடுமுறை அனுமதி

(இது சில மாவட்டங்களில் மாறலாம், மேற்கூறியவைகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அல்லது புதிய படிவங்கள் தங்களிடம் இருந்தால் teachertn.com@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்)

பின்தங்கிய பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை


          பள்ளி படிப்பில் இருந்து பாதியில் வெளியேறிய மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவர்கள் ஆகியோருக்கு மத்திய அரசு சிறப்பு நிதி திட்டத்தை நடத்தி வருகிறது. இந்த உதவித்தொகை ஆண்டுதோறும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது.


Madurai Kamaraj University Notification For B.Ed. Entrance Examination (2013 - 2015)


                           Click here to download the Hall Ticket                
Click here to visit Students List                 Click here to visit Exam Centre List

விடைத்தாள்கள் சேதமடைந்த விவகாரம்: தபால் ஊழியர்கள் இடைநீக்கம்


           விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் ஏற்பட்ட, விடைத்தாள் குளறுபடிகளுக்கு காரணமான, தபால் ஊழியர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


ஆசிரியர் பயிற்சி: தனித் தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பம்


           தொடக்க கல்வி பட்டயத்தேர்வு எழுதும், தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு சார்பில், மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (டயட்) கடந்த கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வு 2012 ஜூன்-ஜூலையில் நடந்தது. தவிர, தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் தேர்வும் அப்போதே நடந்தது.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive