Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு தேர்வு நிலை, பணிமூப்பு பாதிக்காத வகையில் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக கணக்கிடப்படுமா? இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


           தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்த காலத்தை நிரந்தரம் செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களின் பணிக்காலமாக கணக்கீட வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.

இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு


           பள்ளி கல்வித் துறையில், 176 இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். நேரடி தேர்வு மூலம், உதவியாளர் பணியிடம் தேர்வு செய்யப்படுவது இல்லை. இளநிலை உதவியாளர்களில் இருந்து, பணிமூப்பு அடிப்படையில், உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. 



விடைத்தாள் சேதம்: மறுதேர்வு கிடையாது, தமிழ் முதற் தாளில் பெறும் மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கு வழங்கப்பட உள்ளது என தேர்வுத்துறை அறிவிப்பு


         "விருத்தாசலத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள்கள் சேதம் அடைந்த விவகாரத்தில், மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது. தமிழ் முதற்தாளில், மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறார்களோ, அதே மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கும் வழங்கப்படும்" என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
 
 

கலை அறிவியல் கல்லூரிகளில் இலவச கல்வி: சென்னை பல்கலை அறிவிப்பு


               சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள, கலை, அறிவியல் கல்லூரிகளில், இலவசமாக கல்வி கற்க, சென்னை பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
 
 

உண்டு உறைவிட பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு

 

                தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், செயல்பட்டு வந்த சிறப்பு உண்டு, உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணவர்களை, வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறை: அரசு தேர்வுத்துறை திணறல்


          தேர்வுத் துறையையும், இதனோடு சம்பந்தப்பட்ட அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தையும் (டேட்டா சென்டர்) வலுப்படுத்த, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு துறை வட்டாரங்களும் எதிர்பார்க்கின்றன.

விடுதி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி


           பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த, கல்லூரி மாணவர்களுக்கு, ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிப்பதற்காக, பயிற்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
 
 

அனைத்து வசதிகளையும் கொண்ட அதிசய கிராமம் கங்கதேவி பள்ளி


               ஆந்திராவில், ஒரு அதிசய கிராமம் உள்ளது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன், 24 மணி நேர மின் வினியோகத்துடன், சுத்தம், சுகாதாரத்துடன் விளங்கும் இந்த கிராமம், நாட்டின் முன்னணி கிராமங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பல விருதுகளைப் பெற்றுள்ள இந்த கிராமத்தின் தலைவர், சந்திர மவுலி, நேபாள நாட்டின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.


ஐஐடிக்களில் 43% காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள்


         ஐஐடி மற்றும் என்ஐடிக்களில் 40 சதவீதத்துக்கு மேல் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கல்வித் தரம் முன்னேறி வந்தாலும், உலக அளவில் போட்டி போடும் அளவுக்கு இன்னமும் வளரவில்லை. உலக அளவில் மாணவர்களை தயார் படுத்த உருவாக்கப்பட்டவையே ஐஐடி மற்றும் என்ஐடிக்கள். ஆனால், அவையும் எதிர்பார்த்த முன்னேற்றத்தைத் தரவில்லை.

பாரதியார் பல்கலையில் நாளை பி.எட்., நுழைவுத்தேர்வு


          கோயம்பத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில். பி.எட்., நுழைவுத்தேர்வு நாளை நடைபெறுகிறது.
 
 

கல்வி அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை


          விருத்தாசலம் அருகே விடைத்தாள்கள் ரயில் தண்டவாளத்தில் கிடந்த விவகாரம் தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறும்போது, விடைத்தாள்கள் ரயில் தண்டவாளத்தில் கிடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்துள்ளது.
 
 

"அரிதான நாணயங்கள் கிடைத்தால் உதாசீனப்படுத்தாதீர்"




        "அரிதான நாணயங்கள் ஏதேனும் கிடைத்தால், அதை, தயவு செய்து நாணய ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களின் கவனத்திற்கு, கொண்டு செல்லுங்கள். பழைய நாணயங்களை உதாசீனப்படுத்தி, தமிழகத்தின் வரலாற்றை அழித்து விடாதீர்கள்" என, "தினமலர்" நாளிதழ் ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்லூரிகளை உடனே திறக்க மாணவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்


           "மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும்" என, மாணவர்கள் கூட்டமைப்பினர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


வினாத்தாள் கண்காணிப்பு குழுவில் மாணவர்கள்

 
          தமிழகத்தில் அரசு பொது தேர்வு வினாத்தாள் கண்காணிப்பு குழுவில், மாணவர்களும் இந்தாண்டு முதல், சேர்க்கப்பட்டுள்ளனர்.

"விடைத்தாள் சேதமான விவகாரத்தில் தேர்வுத்துறை மீது தவறில்லை"


         "விடைத்தாள், ரயில் பாதையில் கிடந்த விவகாரத்தில், தேர்வு துறையின் தவறுகள் எதுவும் இல்லை" என அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.


ரயில் பாதையில் 10ம் வகுப்பு விடைத்தாள் சிதறி கிடந்த அவலம்


           பார்சலில் அனுப்பப்பட்ட, 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத் தாள்கள், ரயில் பாதையில் சிதறிக் கிடந்ததால், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

கணித அருங்காட்சியகமாக உருமாறுகிறது கணிதமேதை ராமானுஜர் பிறந்த வீடு


                ஈரோடு: ஈரோட்டில் கணிதமேதை ராமானுஜர் பிறந்த வீடு, கணித அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளது. புகழ் பெற்ற கணிதமேதை ராமானுஜர். இவர் பிறந்த வீடு ஈரோட்டில் உள்ளது. இந்த வீட்டை தற்போது கணித அருங்காட்சியமாக மாற்றவுள்ளனர். இது குறித்து புதன்கிழமை ஈரோடு மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


கல்லூரிகள் ஏப்.1-ல் திறப்பு இல்லை?: தள்ளிப்போகிறது பல்கலை தேர்வுகள்


              அரசிடமிருந்து எந்தவொரு தகவலும் இதுவரை வராததால், கல்லூரிகள் திறப்பது பெரும்பாலும் ஏப்ரல் 1-ம் தேதி இருக்காது என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களும், உயர் கல்வித் துறை அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தப்பட இருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள், தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 

ஏப்.1ம் தேதி முதல் பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்புக்கு வட்டி குறைப்பு


          வரும் 1ம் தேதி முதல், பிபிஎப் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 0.1 சதவீதம் குறைக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
 

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா கண்டுபிடிப்பது எப்படி?


          நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.
 
 

தமிழ் தேர்வில் "பிட்": 26 மாணவர்கள் பிடிபட்டனர்


      பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று நடந்த தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், "பிட்" அடித்ததாக, 26 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.
 

22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு


      பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
 
 

தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடை


          ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, தேனி பட்டதாரி ஆசிரியரை வெளியேற்றும் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.
 
 

கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்ற மார்ச் 31 வரை கெடு


         கல்வி உரிமை சட்டத்தை (ஆர்.டி.இ.,) மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவு இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட படாமல் உள்ளது.
 
 

சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம்: வாபஸ் பெற்றது யு.பி.எஸ்.சி.,


              ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி., முதன்மைத் தேர்வில் செய்யப்பட இருந்த மாற்றங்களை, யு.பி.எஸ்.சி., வாபஸ் பெற்றது. ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் முடிவுக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்த முடிவை எடுத்தது.


எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்பில் சேர இணையத்தில் விண்ணப்பம்


           அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்புகளில் சேர, பல்கலை இணையதளம் வழியாக, ஏப்., 13ம் தேதி வரை, பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு தமிழ் 2-ம் தாள் தேர்வு வினா எண்.38 எழுத முயற்சித்திருப்பின் அவ்வினாவிற்குரிய முழுமதிப்பெண் 5 வழங்க உத்தரவு. - One India Tamil - Paper News




           10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற தமிழ் 2ஆம் தாள் தேர்வில், வினாத்தாளுடன் இணைத்து கொடுக்க வேண்டிய படிவம் கொடுக்கப்படாததால் பல பள்ளிகளில் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் வினாவினை எழுத முயற்சித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுகள் துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.  

டாக்டர்,செவிலியர்,ஆசிரியர்பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கே.பி.முனுசாமி



                சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் சவுந்திர ராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ.), ஆறுமுகம் (இந்திய கம்யூ.), என்.ஆர்.ரங்கநாதன் (காங்) ஆகியோர் கவன ஈர்ப்பு கொண்டு வந்தனர். அவர்கள் கூறும் போது, தமிழக அரசு அலுவலகங்களில் அதிகரித்து வரும் காலி பணியிடங்களை பூர்த்தி செய்து நிர்வாக பணிகளை தொய்வின்றி நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்கள்.

தொடக்கக்கல்வி பட்டயத் (D.T.Ed) தேர்வர்கள் மார்ச் 30க்குள் சான்றிதழ்களை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பெறலாம்


          தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, எழுதிய மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பெற்று கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 

10ம் வகுப்புத் தமிழ் இரண்டாம் தாள் தேர்வு: படிவம் இல்லாமல் படிவத்தை எப்படி நிரப்புவது? மாணவர்கள் குழப்பம்




            இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒரு கேள்வியைப் படித்ததும் கடும் அதிர்ச்சி. தமிழ் 2வது தாளில் 38வது கேள்வியாக,"வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் படிவத்தில் நிரப்புக என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு 5 மதிப்பெண்கள். 

10ம் வகுப்பு வினாத்தாளில் "பார் கோடு"


             பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. வினாத்தாள்கள், அந்தந்த கல்வி மாவட்ட மையங்களுக்கு, பத்து நாட்களுக்கு முன்பு அனுப்பப்படும். ஒவ்வொரு மையங்களுக்கும், பணி மூப்பு அடிப்படையில் இரு தலைமை ஆசிரியர்கள் அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.


இளநிலை உதவியாளர் பணியிடங்கள்: பரிந்துரைக்கப்பட உள்ளவர்கள் பட்டியல் வெளியீடு

 
           
             மாநகராட்சி இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்காக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தியில்:-
 
 

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மீண்டும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்


           "டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பகுதிக்கு, மீண்டும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தேர்வாணையத்திற்கு, கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளோம்,' என, சட்டசபையில், பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive