Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PG - New Appointment Joining Date - 10.06.2013


         தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பணி - 2011-12ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமனம் ஆணை 03.06.2013 என்பதற்கு பதிலாக 10.06.2013 அன்று பணியில் சேர அறிவுரை வழங்கி உத்தரவு

5 வயதுக்கு மேற்பட்ட பள்ளி வயது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை


         தொடக்கக் கல்வி - 2013-14ம் கல்வியாண்டு அங்கன் -வாடிகளில் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட பள்ளி வயது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவு.

 

தொடக்கக் கல்வி - 2013-14ம் ஆண்டு பொது மாறுதல் 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் அனுப்ப இயக்குனர் உத்தரவு.


          தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 02898 / டி1 / 2013, நாள்.31.05.2013ன் படி 2013-2014ஆம் ஆண்டு பொது மாறுதல், 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரத்தை 31.05.2013 மாலைக்குள் இமெயில் மூலம் அனுப்பி வைக்க தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
 

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - ஒட்டுமொத்த தேர்ச்சி 89%


            இந்த 2013ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, பள்ளிகள் மூலமாக, மொத்தம் 10 லட்சத்து 51 ஆயிரத்து 62 பேர் எழுதினர். அவர்களில், மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 794. மாணவிகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 268 பேர்.

எத்தனை பேர், எதில் 100க்கு 100 பெற்றுள்ளனர்?


           பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், அறிவியல் பாடத்தில், அதிகளவாக 38,154 பேர், 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதற்கடுத்து கணிதத்தில் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - 9 பேர் மாநில முதலிடம்!


           பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், எப்போதும் இல்லாத வகையில், 498 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 9 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த அளவில் முதல் மதிப்பெண் 499


           மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், ஒட்டுமொத்த அளவில், 499 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.

Proceedings


         SSLC துணைத் தேர்வெழுத Online மூலம் 03.06.2013 முதல் 05.06.2013 விண்ணப்பிக்கவும், தேர்வு கட்டணம் : ஒரு பாடத்திற்கு ரூ.125/-, தேர்வுகள் 24.06.2013 முதல் 01.07.2013 வரை நடைபெறும்

          SSLC மதிப்பெண் மறுகூட்டலுக்கு Online முறையில் 07.06.13 முதல் 10.06.13 வரை விண்ணபிக்கலாம், மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் ரூ.305/- மற்ற பாடங்களுக்கு ரூ.205/- கட்டணம் நிர்ணயம்

Click Here 4 Download Instructions


 

ஜுன் 20ம் தேதி மதிப்பெண் பட்டியல், உடனடித் தேர்வுகள், ஜுன் 24ம் தேதி முதல் ஜுலை 1ம் தேதி வரை நடக்கும்.


           மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளையடுத்து, அதற்கான மதிப்பெண் பட்டியல், ஜுன் 20ம் தேதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - 9 பேர் மாநில முதலிடம்!


           பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், எப்போதும் இல்லாத வகையில், 498 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 9 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 9 பேர் முதலிடம்


               பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை  வெளியிடப்பட்டது. இதில் 498 மதிப்பெண்கள் பெற்று 9 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். 497 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது  இடத்தை 52 பேர் பெற்றுள்ளனர்.496 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை 137 பெற்றனர். மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 20-ம் தேதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சதமடித்தவர்கள்: கணிதம்:29,905
 
அறிவியல்:38,154

சமூக அறிவியல்:19,680

பத்தாம் வகுப்பு, தேர்வு முடிவு: மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம்


              இன்று வெளியாகும் பத்தாம் வகுப்புதேர்வு முடிவையொட்டி, 32 மாவட்டங்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர். தனியார் வெப்சைட்கள் இல்லாமல்,தேர்வுத் துறை இணைய தளங்கள் மற்றும் நூலகங்களில் உள்ள இணைய தளங்கள் மூலமாக,தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. 
 

ஆசிரியர் பயிற்சி: ஆர்வம் காட்டாத மாணவர்கள்


              ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. கடந்த, நான்கு நாட்களில், வெறும், 1,500 விண்ணப்பங்கள் மட்டும் விற்பனை ஆகியுள்ளன. இறுதி தேதிக்குள், 5,000 விண்ணப்பங்கள் விற்றால், பெரிய விஷயம் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

ஆங்கில வழிக் கல்விக்கு அனுமதி அளித்தால் ஏராளமான உபரி ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்

              அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருகிறது. இலவச புத்தகம், சீருடை,நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித் தொகை என பல்வேறு நலத் திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும்போதும் ஏன் மாணவர்கள் பள்ளியில் சேர்வதில்லை. 

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி?


 
              இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
 

விடுவிப்பு படிவம்

செப்.,15ம் தேதி பி.எட்., நுழைவுத்தேர்வு சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு செப்டம்பர் 15ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

           ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி முறையில் பி.எட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி காலை 11.00 முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.
 

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 31ம் தேதி வெளியீடு


           பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், நாளை (31ம் தேதி), காலை, 9.15 மணிக்கு வெளியாகிறது. அரசின் இணையதளங்களில் மட்டுமே தேர்வு முடிவுகளை பார்க்க முடியும் என கல்வி துறை அறிவித்துள்ளது.

மொத்தம் 2,881 காலி இடங்கள்: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளி முதல் விண்ணப்பம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


           முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கலாம்.


சிறப்பு ஆசிரியர் பணி: உத்தேச பதிவுமூப்பு பட்டியல் வெளியீடு 7–ந் தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்


         சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;– 

              ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆசிரியர் (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர்கள்) பணி காலி இடங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்கள் அந்தந்த வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாநில பதிவுமூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். 


பொது மாறுதல் கலந்தாய்வு - ADW

           ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைனில் 30.05.2013 காலை 10.00 மணி முதல் நடத்தப்பட உள்ளது

பள்ளிக்கல்வித் துறை - உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


            அரசாணை (1டி) எண்.129 பள்ளிக் கல்வித் (இ1) துறை நாள் 09.05.2013 அரசாணையின்படி 20.05.2013 முதல் 29.05.2013 வரை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு பெற்று மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விதியில் திருத்தம்




                  2013 - 14 ஆம் கல்வியாண்டு முதல் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண்ணாசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். 

பள்ளிக்கல்வித் துறை - மாறுதல் ஆணை பெற்ற முதுகலை/பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/இடைநிலை ஆசிரியர்கள்/உடற்கல்வி ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.2013 முதல் 07.06.2013க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


            மாறுதல் ஆணை பெற்ற முதுகலை/பட்டதாரி /ஆசிரியர் பயிற்றுநர் /இடைநிலை ஆசிரியர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.2013 முதல் 07.06.2013க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


               2011-12ம் கல்வியாண்டிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டு கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்றவர்கள் 3.6.2013 அன்று பணியில் சேர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. தற்போது அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து 10.6.2013 அன்று திறக்கப்பட உள்ளதால் மேற்கண்டவாறு புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் லிஸ்ட் விரைவில் வெளியீடு: இயக்குநர்


          தமிழகத்தில் அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரம் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படுகிறது.

முதுகலை ஆசிரியர்கள் போட்டி எழுத்து தேர்வு: மே 31 முதல் விண்ணப்பம்


           முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வுக்குரிய விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது.

விடைத்தாள் திருத்தும் பணி; 700 ஆசிரியர்கள் புறக்கணிப்பு


          சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லூரி மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக, கொண்டு வரப்பட்ட புதிய நடைமுறைக்கு, 700 ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சி.பி.எஸ்.சி., பிளஸ் 2 தேர்வை 2013ல் எழுதி தேறிய மாணவ-மாணவிகள்


சென்னை மண்டல விபரம் - 2013
தேர்வெழுதியோர் விபரம்
ஒட்டுமொத்தமாக தேர்வெழுதியோர் - 77,616
மாணவர்கள் - 42,253
மாணவிகள் - 35,363
தேர்ச்சி அடைந்தோர் விபரம்
மொத்தம் - 71,271
மாணவர்கள் - 38,057
மாணவிகள் - 33,214

சி.பி.எஸ்.சி., பிளஸ் 2 தேர்வு முடிவு - சென்னை மண்டல தேர்ச்சி விகிதம் - 2013


          சமீபத்தில் வெளியிடப்பட்ட சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், சென்னை மண்டலம் முதலிடம் பெற்றது. கடந்த 2012ம் ஆண்டும், சென்னை மண்டலமே முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive