Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேளாண் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு

       வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், வேளாண் தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்களில், 2,200 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.


சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: சென்னையில் 3,000 பேர் கைது

              பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து ஊதிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் உயர்த்துதல், பணி நிரந்தரம், பதவி உயர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் தொடர்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


அக்கறை இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்

         உலகிலேயே இருதய நோய்களால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இருதய நோய்கள் குறித்தும், இருதயத்தை பாதுகாப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச இருதய கூட்டமைப்பு சார்பில் செப்., 29ல் உலக இருதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சலாக இருக்க வாய்ப்பு மாணவர்களிடம் காய்ச்சல் இருந்தால் ஆஸ்பத்திரிக்கு தெரியப்படுத்த வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனரகம் கடிதம்

     மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கடுமையான காய்ச்சல் இருந்தால் அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் எனவே உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிக் கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது.

பி.எட்., கல்வி கட்டணம் உயர்கிறது

         தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள 7 அரசு பிஎட் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் பிஎட் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில்  உள்ள 1,777 இடங்களுக்கு 8,005 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

வங்கி எழுத்தர் தேர்வு: சென்னையில் 3 நாள் இலவசப் பயிற்சி வகுப்பு

       வங்கி எழுத்தர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சென்னையில் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கம், "எம்பவர்' சமூக நீதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன. 

தொடங்கியது பி.எட். கலந்தாய்வு: முதல் நாளில் 78 பேருக்கு சேர்க்கைக் கடிதம்

ஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 78 பேர் சேர்க்கை கடிதங்களைப் பெற்றனர்.

வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு

           வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், வேளாண் தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்களில், 2,200 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இடமாறுதல்இவர்களில், வேளாண் ஆசிரியர்கள், 14 ஆண்டுகளாகவும், கணினி ஆசிரியர்கள், எட்டு ஆண்டுகளாகவும், எந்தவித இடமாறுதலும் இல்லாமல், ஒரே இடத்திலே பணிபுரிகின்றனர். 

சி.பி.எஸ்.இ., தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

        சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, 2016 மார்ச்சில், தனித்தேர்வராக எழுத உள்ளவர்கள், சி.பி.எஸ்.இ., இணையதளத்தில், தங்களின் விவரங்களை, அக்., 15க்குள் பதிவு செய்ய வேண்டும்.

வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

      அரசு நிர்வாக இயந்திரத்தின் முதுகெலும்பாக கருதப்படுவது வருவாய்த்துறை ஆகும். சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்சான்று, ரேஷன் அட்டை உட்பட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தாலுகா அலுவலகங்கள் மூலமாகவே வழங்கப்படுகின்றன.

மகளிர் சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைப்பேசிகள்

          சுய உதவிக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்களுக்கு கணினிமயமாக்கப்பட்ட கைப்பேசிகள் வழங்கும் திட்டமான, "அம்மா கைப்பேசி திட்டம்' தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு, அதில் ஏற்படும் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும்

        Education is the most powerful weapon which you can use to change the world – Nelson Mandela.



பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க 20 நடமாடும் குழுக்கள் அமைப்பு

      பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க 20 நடமாடும் குழுக்கள் அமைப்பு

        ஈரோடு மாவட்டத்தில்  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக 20 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


அரசுத்துறை காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

     வருவாய், வணிக வரி, ஊரக வளர்ச்சித்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

'நேதாஜி அஸ்தியை ஆய்வு செய்யுங்கள்

         கோல்கட்டா:''ஜப்பானின் ரென்கோஜி கோவிலில் உள்ள, விமான விபத்தில் இறந்ததாக கூறப்படும் நேதாஜியின் அஸ்தியை,டி.என்.ஏ., சோதனை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்,'' என, நேதாஜியின் மகள் அனிதா போஸ், 72, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வட்டி விகிதம் குறையுமா? ரிசர்வ் வங்கி நாளை அறிவிப்பு

         புதுடில்லி;மத்திய அரசும், தொழில் துறையினரும் கொடுத்து வரும் அழுத்தத்துக்கு பணிந்து, ரிசர்வ் வங்கி, நாளை, வட்டி விகிதத்தை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சீனப் பொருளாதாரம் மந்தமாகி வருவதால், உலகம் முழுவதும், பல தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
 

பணிவரன்முறை செய்யாததால் வி.ஏ.ஓ.,க்கள் தவிப்பு;அரசு மீது குற்றச்சாட்டு

         சிவகங்கை;டி.என்.பி.எஸ்.சி., மூலம் பணியில் சேர்ந்த வி.ஏ.ஓ.,க்களை பணிவரன்முறை செய்யாமல் அரசு இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., மூலம் கடந்த 2008ல் இருந்து இதுவரை 6ஆயிரம் வி.ஏ.ஓ.,க்கள் நேரடியாக தேர்வாகியுள்ளனர்.
 

ஆதார் அட்டை இன்றி லேப் டாப் கிடைக்காத மாணவர்கள் ஏமாற்றம்!உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள்

        ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கு இலவச லேப் டாப் நிறுத்தப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். உச்சநீதி மன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளால்அரசு சலுகை உரிய நேரத்தில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


அரசுக் கல்லூரிகளில் செயல்படாத மொழி ஆய்வகங்கள்?

          அரசுக் கல்லூரிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட மொழி ஆய்வகத் திட்டம் செயலிழந்து உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.இதற்கென தனி வகுப்பு நேரம் (பீரியட்) ஒதுக்கி, முறையாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய கண்காணிப்பை அமல்படுத்தினால் மட்டுமே திட்டம் மாணவர்களைச் சென்றடையும் என பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


பி.எட்., மாணவர் சேர்க்கைகவுன்சிலிங் இன்று துவக்கம்

         தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, ஏழு அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிக் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கையை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது.இந்த ஆண்டு, 1,750 இடங்களுக்கு, 7,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. முதற்கட்ட கவுன்சிலிங்கில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் குடும்பங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பங்கேற்கின்றனர்.

பிளஸ் 2, 10ம் வகுப்பு தனித்தேர்வு இன்று துவக்கம்

          பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு இன்று துவங்குகிறது. பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் பள்ளி களில் படிக்காமல் தனியாகப் படித்து தேர்வு எழுதுவோருக்கு, செப்., - அக்., மாதங்களில், அரசு தேர்வுத் துறையானது, தனித்தேர்வை நடத்துகிறது. 
 

கட்டாய ஓய்வு கொடுக்கும் புதிய சட்டம் அமல்: 50 வயதுக்கு மேல் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்

       மத்திய அரசில் 18 பெரிய துறைகள் உள்ளன. ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, மனித வள மேம்பாடு, எல்.ஐ.சி., தபால், பி.எஸ்.என்.எல்., கப்பல், வருமான வரி, சுங்கவரி உள்ள பல துறைகளில் ரெயில்வே மிகப் பெரிய துறையாகும். இந்த துறையில் மட்டும் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.அனைத்து மத்திய அரசு துறைகளிலும் மொத்தம் 34 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 

சமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார்அளிக்க புதிய வசதி

சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியர்கள் கட்டாயப்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்தால், செல்லிடப்பேசி எண் மூலம் புகார் அளிக்குமாறு, முகவர்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றனர்.கட்டாய வசூல்: பெரும்பாலான இடங்களில் விநியோக ஊழியர்கள், ஒரு எரிவாயு உருளைக்கு ரூ.25 முதல் ரூ.35 வரை ரசீது தொகையை விட கூடுதலாகப் பணம் வசூலிக்கின்றனர்.

இணையம் வேகமாக இயங்க‌...

ஸ்மார்ட்போன் மூலம் இணையத்தில் உலா வரும் போது இன்னும் கொஞ்சம் கூடுதல் வேகம் வேண்டும் என்று தோன்றுகிறதா? உங்கள் இணைய சேவை நிறுவனத்துடன் மல்லு கட்டுவது தவிர, இணைய வேகத்தை அதிகரிக்கச்செய்யும் எளிய வழிகளை லைப்ஹேக்கர் தளம் பட்டியலிட்டுள்ளது;

தமிழைக் கணினியில் மொழிபெயர்க்கும் மென்பொருளை உருவாக்கப் பயன்படும் ஆய்வு: முதல்முறையாக முனைவர் பட்டம் பெற்ற சென்னை மாணவி



 தமிழைக் கணினியில் மொழி பெயர்க்கும் மென்பொருளை உரு வாக்கப் பயன்படும் ஆய்வுக் கட்டுரைக்கு முதன்முறையாக முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் சென்னை மாணவி.
மொழிபெயர்ப்புக்கு 100 ஆண்டு வரலாறு உண்டு. இந்தியாவில் இந்தி உட்பட பல மொழிகளின் மொழிபெயர்ப்புக்குக் கணினியை ஏறக்குறைய முழுமையாகப் பயன்படுத்திவிட்டனர் என்றே சொல்லலாம்.

மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்கள் கட்டாயம்: பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. உத்தரவு...

         சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்களையும் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. அமைப்பு அண்மையில் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: 

இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட அரசு உத்தரவு

          முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளான, அக்., 15ம் தேதி, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 
 

வீட்டுக்கடன் வாஙும் முன் திட்டமிடுங்கள்

    சொந்த வீட்டு கனவை நனவாக்கும் அஸ்திரமாக வங்கிக்கடன்கள் இருப்பதால் அதுவே பெரும்பாலானோரின் தேர்வாக இருக்கிறது. அத்துடன் வீட்டுக்கடனுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளும், வீடு வாங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும் சாதகமான அம்சங்களை கொண்டிருக்கின்றன. எனினும் வீட்டுக்கடன் வாங்குவதற்கு முன்பு சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால்தான் விரைவாக வீட்டுக்கடனை முடிக்க வேண்டும்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive