Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுத்துறை காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

     வருவாய், வணிக வரி, ஊரக வளர்ச்சித்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

        சங்கத்தின் 12-ஆவது மாவட்டப் பேரவைக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.இன்னாசிமுத்து வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


தமிழகத்தில் மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வருவாய், வணிகவரி, ஊரக வளர்ச்சித் துறைகளில் 40 சதவீதம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தத் துறைகளில் இப்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப 3 மடங்கு பணியிடங்கள் தேவைப்படுகின்றன. அரசு அறிவிக்கும் புதிய திட்டங்கள் இந்தத் துறை ஊழியர்கள் மூலம்தான் செயல்படுத்தப்படுகிறது.

தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் எண்ணிக்கையிலும் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கையிலும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. எனவே காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு மூப்பின் அடிப்படையில் மாவட்டத்துக்கு ஆயிரம் பேர் வீதம் நியமிக்க வேண்டும். மேலும் பணிக் காலத்தில் இறந்த சுமார் 40 ஆயிரம் ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.

மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளைக் களைய மாதந்தோறும் ஆட்சியர், காப்பீடுத்துறை, மருத்துவத்துறையினரை அடங்கிய கூட்டத்தை மாதம்தோறும் நடத்த வேண்டும். கோவையில் கட்டப்பட்டு வரும் ஆட்சியர் அலுவலகத்தில் மகளிருக்கு ஓய்வறை, குழந்தைகள் காப்பகம், உள் விளையாட்டரங்கம் கட்ட வேண்டும். தொழில்நுட்ப உதவியாளர், நேரடி உதவியாளர்களின் பணி விதி, ஊதியக் குழு முரண்பாடுகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கச் செயலர் சு.குமார், பொருளாளர் மு.ரங்கராஜூ உள்ளிட்ட நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் ஏராளமானோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive