NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

IGNOU will launch Online Exam Soon?

         இந்திராகாந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக் கழகமான ஐ.ஜி.என்.ஓ.யு., ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. இது குறித்து, இப்பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வர ராவ் கூறியதாவது: 
         ஐ.ஜி.என்.ஓ.யு.,வில், 28 லட்சம் மாணவர்கள் தொலைதுாரக் கல்வி பயில்கின்றனர். முதன்முறையாக, இந்தாண்டு, மாணவர் சேர்க்கை, ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான தேர்வையும், ஆன்லைன் மூலம் நடத்த பரிசீலித்து வருகிறோம். மத்திய மனித வள அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவற்றின் ஒப்புதல் கிடைத்ததும், ஆன்லைன் தேர்வு அறிமுகப்படுத்தப்படும். சர்வதேச திறந்தவெளி பல்கலைக் கழகங்களில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், அவை, ஆன்லைன் தேர்வுகளை சுலபமாக நடத்துகின்றன. ஆனால், ஐ.ஜி.என்.ஓ.யு.,வில் மாணவர்கள் அதிகம்; அதில், ஏழைகள், பெண்கள், பணியாற்று வோர், இல்லத்தரசிகள் என, பலதரப்பினர் உள்ளனர். அவர்களுக்கு, ஆன்லைன் தேர்வு சுலபமாக இருக்குமா என்றும், பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஐ.ஜி.என்.ஓ.யு., 228 வகையான, இளங்கலை, முதுகலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive