புவியியல் சுரங்கத்துறை அலுவலகத்தில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

     விருதுநகர் மாவட்ட துணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
     இது குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
இம்மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு ரூ.9 ஆயிரத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். இப்பணிக்கு எஸ்.சி.எ., எஸ்.சி, எஸ்.டி ஆகிய பிரிவினருக்கு 21 வயது முதல் அதிகபட்ச வயது வரம்பு 35 வயதிற்குள்ளும், எம்.பி.சி, பி.சி பிரிவினருக்கு 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
மேலும், குறைந்தபட்ச கல்வி தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். எனவே இப்பணிக்கு தகுதியுள்ளவர்கள் சுய விவர குறிப்புகளுடன், ஆதார் அடையாள அட்டை, உரிமம், ஜாதிசான்று ஆகியவைகளுடன் விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் துணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம், விருதுநகர் என்ற அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற அக்.5-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive