தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில்,
காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வுகள் முடிந்துவிட்டன. கடந்த, 26ம் தேதி
முதல், விடுமுறை விடப்பட்டு உள்ளது. வரும் 3ம் தேதி மற்றும், 5ம் தேதி என,
இரண்டு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
ஆனால், பல இடங்களில் தனியார் பள்ளிகள், சில நாட்களுக்கு மட்டும் விடுமுறை
அறிவித்துவிட்டு, வகுப்புகளை துவங்கி விட்டன. இதனால், மாணவ, மாணவியர்
குழப்பமடைந்து உள்ளனர்.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகளுக்கு, பெற்றோர் புகார் அனுப்பினர்.
இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக்
ஆய்வாளர்கள் மூலம், பள்ளி நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடப்பட்டு
உள்ளது.
'அரசு அறிவித்த அட்டவணைப்படி மட்டுமே, வகுப்புகளை நடத்த வேண்டும்.
காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், விதிமுறையை மீறி
வகுப்பு நடத்தக் கூடாது. மீறும் பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்புவதுடன்,
அங்கீகாரம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்' என, அதிகாரிகள்
எச்சரித்துள்ளனர்.
சிறப்பு வகுப்புக்கு அனுமதி
காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், 10ம் வகுப்பு மற்றும்
பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்த, கல்வித் துறை
அனுமதி வழங்கியுள்ளது. மெட்ரிக் பள்ளிகள் மட்டுமின்றி, அரசு, அரசு
உதவிபெறும் பள்ளிகளும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு
வகுப்புகளை இந்த ஆண்டு நடத்துகின்றன.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...