பார்வை இழந்தாலும் பாதை மாறாத பயணம்... மாற்றுத்திறன் ஆசிரியர் - முத்துசாமி

ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8,9,10 வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முத்துசாமி, 33. சத்திரக்குடி அருகே செவ்வூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் யாரும் பள்ளிப்படிப்பை முழுமையாக தாண்டாத நிலையில், பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் பயின்று இன்று எம்.ஏ., பி.எட்., எம்.பில்., தேர்ச்சிபெற்று முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரிய ராக மாணவர்களுக்கு கல்வி போதித்து வருகிறார். 

        பிறவியில் இருந்தே பார்வை இழந்த ஆசிரியர் முத்துசாமி, பிரெய்லி எனப்படும் தொடுஉணர்வு, கேட்டல், உச்சரித்தல் முறையில் கல்வி பயின்றுள்ளார். மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் தூய்மையான தமிழ் உரையாடல் மூலம் பாடங்களை கற்றுக் கொடுக்கிறார். கரும்பலகையில் எழுதி காண்பிப்பதற்கு மாணவர்களின் உதவியை நாடுகிறார். இவரிடம் பாடம் படிக்கும் படிக்கும் மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுகின்றனர். பள்ளியின் காலை பிரார்த்தனையின்போது தன்னம்பிக்கையை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்குகிறார். ஓய்வு வேளை களில் நீதிபோதனை, பாடல், சமுதாய விழிப்புணர்வு கருத்துக் களை உரக்கச் சொல்லி பிஞ்சு மனங்களுக்கு உரமேற்றுகிறார்.

மேலும் தமிழ் சங்கம் சார்பில் நடைபெறும் பட்டிமன்றம், சொற் பொழிவு உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். படிப்பதற்காக ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவிவருகிறார்.பார்வை இழந்தாலும் பாதை மாறாமல் பயணிக்கும் ஆசிரியர் முத்துசாமி, ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமான திறமைகள் குடிகொண்டுள்ளது. அதை வெளிக்கொண்டுவருவது கல்வி மட்டுமே. குறைகளை எண்ணி தளர்ந்துவிடாமல் தன்னம்பிக்கையுடன் முயற்சித்தால் வெற்றி எப்போதும் நம் அருகில் தான் என்கிறார் புன்னகையுடன்... 
இவரை வாழ்த்த: 97863 26166.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive