Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.எட். சேர்க்கை: தர வரிசைப் பட்டியல் வெளியீடு.

         ஆசிரியர் கல்வியியல் இளநிலைப் பட்டப் படிப்பான பி.எட். சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

                 தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது. வருகிற 28-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ஆம் தேதி வரை 6 நாள்கள் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு 7,425 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இது குறித்து பி.எட். கலந்தாய்வு செயலர் பாரதி கூறியதாவது: பி.எட். சேர்க்கைக்கான குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண் அண்மையில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு விண்ணப்பதாரருக்குமான தனிப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டது. இந்த தனிப்பட்ட கட்-ஆஃப் தொடர்பில் (லிங்க்) விண்ணப்ப எண்ணை மாணவர்கள் பதிவு செய்தால் தங்களுடைய ரேங்க், கட்-ஆஃப், பாடம் உள்ளிட்ட விவரங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive