NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET தேர்வில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க கோருதல் தொடர்பாக - Request Letter

*************
பெறுநர்
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்
தலைமைச் செயலகம்,
சென்னை.
           
பொருள்:    முதுகலை ஆசிரியர் நியமனத்தில் வழங்கப்படுவதுபோல் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க கோருதல் தொடர்பாக.


மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்.
      ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சதவீத மதிப்பெண் சலுகை அளித்த இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

 2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 1, தாள் 2ல் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்க்ப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1 ஐ பொருத்தவரையில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில்தான் பணி நியமனம் இருக்கும் என தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்தனர். தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மூலம் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது. இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கான தாள் 1ல் தேர்வானோர் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று தங்களது பதிவு மூப்பை சரிபார்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

                        இதன்படி தேர்வர்கள் தங்களது பதிவு மூப்பை சரிபார்த்துக்கொண்டனர். இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது வேலைவாய்ப்பக பதிவு மூப்பு தேதி கோரப்படாதது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய இயலாத நிலையில் நாங்கள் உள்ளோம். இதனால் அரசு வேலை கிடைக்கும் என நம்பியிருந்த வயது முதிர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

           முதுகலை ஆசிரியர் தேர்வில் வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு கௌரவம் அளிக்கும் வகையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு தேர்வுப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஒரு ஆண்டுக்குள் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது. 1 முதல் 3 ஆண்டுகள் வரை 1 மதிப்பெண்ணும் 3 முதல் 5 ஆண்டுகள் வரை 2 மதிப்பெண்ணும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை 3 மதிப்பெண்ணும் 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. அதுபோல் 2013ல் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 1 எழுதி வெற்றிபெற்ற தேர்வர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 2  எழுதி வெற்றி பெற்றவர்களுக்கும் அவர்களது வேலை வாய்ப்ப்க பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளித்து தேர்வுப் பட்டியல் தயார் செய்து வெளியிட்டு உதவுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்பாதம் வணங்கி கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் ஆசிரியர் தகுதி்த் தேர்வில் தேர்ச்சி பெற்ற வயது முதிர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வில் ஒளியேற்றும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு என்றென்றும் நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம் அம்மா.
 




20 Comments:

  1. thanks padasalai for published this letter

    ReplyDelete
  2. "டெட்' தேர்வு: பணி நியமனம் கேட்டு ஆர்ப்பாட்டம் --- தின மணி நாளேடு

    ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் பணி நியமனம் வழங்கக் கோரி சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு தேர்வர்கள் கோரிக்கை மனுவுடன் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறியது:

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி நியமனங்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்படுவதில்லை.

    எனவே, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திலும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையைப் பின்பற்றக்கூடாது. ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பாணையில் 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்தால்தான் தேர்ச்சி என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்ச்சி மதிப்பெண் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 55 சதவீதமாக (82 மதிப்பெண்) குறைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், ஒவ்வொரு தரத்தில் மதிப்பெண்கள் வழங்கப்படுவதால், தகுதித் தேர்வில் எங்களை விட குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் கூட, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் ஆசிரியராக பணி நியமனம் பெற வாய்ப்புள்ளது.

    எனவே, மதிப்பெண் தளர்வை அடுத்துவரும் தேர்வுகளில்தான் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தத் தேர்வில் நடைமுறைப்படுத்தக்கூடாது.

    அவ்வாறு நடைமுறைப்படுத்தினால், முதலில் 60 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அடுத்ததாக மதிப்பெண் சலுகையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

    ReplyDelete
  3. for contact us
    take immediate action
    above 90Mark candidates call us for case against relaxation in Madurai high court
    join with us or support us call me very urgent
    9952198486

    ReplyDelete
  4. Yes cancel the waitage system... the government should be follow tet marks and seniority....... pls take care about This letter.....

    ReplyDelete
  5. TET examla pass (above 90 Mark)+ Employment seniority ITHUTHAAN CORRECT ..............matha ellaamea thappu...thappu...thappu.........

    ReplyDelete
  6. s this method also good but this letter shd be reach to amma and she will take an
    necessary action before the election......

    ReplyDelete
  7. ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) 2012 5 சதவீத சலுகை அறிவிக்கப்பட உள்ளது cell 9842366268 saravanan01975@gmail.com

    ReplyDelete
  8. please this letter should be hand over to our CM amma immediately. How this should be reached to her. Please take action as early as possible.

    ReplyDelete
  9. Thanks padasalai

    ReplyDelete
  10. Tet pass & employment seniority is best

    ReplyDelete
  11. Tet & employment seniority

    ReplyDelete
  12. very very good padasalai..best pathivumupu than

    ReplyDelete
  13. thangal kuriathu pol nadanthal muthal nandrium partyum padasalaikuthan.tet,HSC,d.ted,ug,BEd,employment seniority,work experiance calculate panunna seniors liflela cfl light otherwise tubelighthan sir.

    ReplyDelete
  14. Amma please consider this save us we are strugling hard with our children more than 15 years please save us.

    ReplyDelete
  15. 1997 la B.A.Tamil padichchi, 2007 la B.Ed mudichchi, Tet la 106 marks score panni vettiya pogappohuthu. Kandippa senioritykku importance kudukka mattanga.Pongada neengalum unga tetyum.

    ReplyDelete
  16. Seniority Paper 1 ku kandipa venum.becoz training muduchu ten years job kidaikum nu wait panitu irukom.

    ReplyDelete
  17. Please considered paper 1 TET mark +seniority posting.
    Paper 2 tet mark + seniority mark posting please

    ReplyDelete
  18. Tet pass & employment seniority best

    ReplyDelete
  19. Tet pass employment seniority best

    ReplyDelete
  20. Tet pass employment seniority best

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive