NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News: முதுகலை பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் 1591 தோற்றுவிப்பு - மாவட்டம் / பாடம் வாரியான எண்ணிக்கை பட்டியல்


 
 
 




2 Comments:

  1. PG TRB EXAM EPPA CALLFOR VARUM PLS

    ReplyDelete
  2. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு?
    தொடரும் நாளை, நாளை
    என்றுவரும் அந்த நாளை?
    2015 – 16 முதுகலை பட்டதாரி ஆசிரியர் (1062) காலிப்பணியிடம் நியமனம் செய்தல் தொடர்பாக 10.02.2016 அன்று அரசின் ஆணை வெளியிடப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை தேர்வு சம்மந்தமான எண்ணற்ற தகவல்கள் செய்தித்தாள்களிலும் கல்விதொடர்பான வலைதளங்களிலும் வெளிவந்துகொண்டிருக்கின்றன அறிவிப்புச் செய்தியைத் தவிர. அரசாணையும், அரசு விரைவாகச் செயல்படுகிறது என்பதும், கல்வித்துறை நீதித்துறைக்கு அளித்த உறுதியும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் பேச்சும், செய்தித்தாள்களின் தொடர் செய்தியும் உண்மை என்றால் கீழ்வரும் செய்திகள் நமக்கு உணர்த்துவது என்ன? கிணறு வெட்டவில்லை என்று முறையிடுவதா? அல்லது கிணறே காணவில்லை என்று முறையிடுவதா?

    04.03.16 அன்று தினமலரில் சூன் அல்லது சூலையில் தேர்வு நடக்குமென்று குறிப்பிட்டது. இதே செய்தியைத் தமிழ் ஹிந்து நாளிதழ் 09.03.2016 அன்று வெயியிட்டது.

    26.06.16 அன்று தினமணியில் முதுகலை ஆசிரியர் தேர்வு சம்மந்தமாக ஒரு சிறப்புக் கட்டுரையை வெளியிட்டது. “2 ஆண்டுகளாக நடத்தப்படாத போட்டித்தேர்வு, தமிழகம் முழுவதும் காலியாக இருக்கும் 3,500 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்” - என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் ஆசிரியர் பற்றாக்குறையினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுள்ளதாகவும் இந்த விசயத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

    முதுகலை ஆசிரியர்கள் கழகம் தொடர்ந்த வழக்கில் மாணவர்களின் விகிதாசாரத்திற்கேற்ப ஆசிரியர்களை நியமிக்கவும், முதற்கட்டமாக 1600 முதுகலை ஆசிரியர் பணியிடம் தோற்றுவிக்கப்படுவார்கள் என்றும், அரசிடம் இருந்து ஆணை பெற்றவுடன் ஆசிரியர்கள் பற்றாக்குறை தீர்க்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை 11.07.16 அன்று தெரிவித்தது.

    24.09.16 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற ஓர் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அவர்கள் 1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு இன்னும் 10 அல்லது 15 நாட்களில் வெளியிடப்படும் என்று கூறினார். இன்றோடு 84 நாள் ஆகிறது. அவர் கூறிய அந்த 10 அல்லது 15 நாள் இன்னும் வரைவில்லை போலும்.

    23.10.16 அன்று தினமலரில் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற செய்தி வெளியிடப்பட்டது. 30.11.16 அன்று 1500 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாகக் கல்விச் செய்தி என்ற வலைதளமும் மற்ற கல்விசார்ந்த வலைதளங்களும் செய்தித்தாள் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியிட்டன.
    நாளை, நாளை என்று ஒவ்வொரு நாளும் நாளை வந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அறிவிப்பிற்கான அந்த நாளை எப்போதுதான் அகப்படுமோ? யாராவது தகவல் தெரிந்து கூறினால் பயனுள்ளதாக இருக்கும் தோழர்களே!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive