Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வருட பலன் 2017 - ரிஷபம்

ரிஷபம்
கஷ்ட, நஷ்டங்களைக் கண்டு கலங்காதவர்களே! உங்கள் ராசிநாதன் சுக்ரனும், தன&பூர்வ புண்யாதிபதியான புதனும் சாதகமாக இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொள்ளக் கூடிய சக்தி கிடைக்கும். முன்னேற்றம் உண்டு.
சாதுர்யமாகப் பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். மனஇறுக்கம் ஒருபக்கம் இருந்தாலும் தைரியமும் பிறக்கும். செவ்வாயும் சாதகமாக இருப்பதால் சகோதர வகையில் உதவிகள் உண்டு. எதிர்ப்புகள் குறையும். வீடு வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. அரசிடமிருந்து முறையான கட்டிட வரைப்பட அனுமதிப் பெறாமல் கட்ட வேண்டாம். விதிகளை மீறி கூடுதல் தளம் அமைப்பது, கூடுதல் அறை அமைப்பதை தவிர்ப்பது நல்லது. கௌரவப் பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் இருந்தும், நட்பிருந்தும் அவர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். 5&ம் இடத்தில் ராகு நிற்பதால் இனந்தெரியாத மனக்கவலை வந்துப் போகும். உங்களின் திறமைகள் குறைந்து விட்டதாக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள். உறவினர்களில் சிலர் உங்களை அவமதிக்க வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளிடம் உங்களுடைய கோபத்தை காட்டாதீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் தலையிட்டு அதை சீர்த்திருத்தம் செய்வதாக நினைத்து அதில் செலவு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். பூர்வீகத்தை நோக்கி இடம் பெயர்வதும் நல்லதல்ல. சிலர் சொந்த ஊரை விட்டு விலகி வேறு இடத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். உங்களுடைய 12&வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் விரையச் செலவுகள் அதிகமாகும். பயணங்களும் இருக்கும். தூக்கமும் குறையும். காலமெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியது தானா, மகிழ்ச்சியே வாழ்க்கையில் இருக்காதா என்றெல்லாம் புலம்புவீர்கள். உங்கள் ராசியை சனிபகவான் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் நீங்கள் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. காரம், கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். முடிந்த வரை வெளி உணவுகளையும் தவிர்க்கப்பாருங்கள். வழக்கம் போல மனதில் தோன்றுவதையெல்லாம் வெளிப்படையாகப் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். அடுத்தடுத்த வீண் பழிகள் வர வாய்ப்பிருக்கிறது. சிலர் நன்றி மறந்துப் பேசுவார்கள். உங்களிடம் உழைப்பை வாங்கிக் கொண்டு உங்களை கறிவேப்பில்லையாக தூக்கி எறிவார்கள். அதையெல்லாம் நினைத்து அவ்வப்போது கண் கலங்குவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உங்களுடைய இரக்க சிந்தனையால் தான் நீங்கள் அவ்வப்போது ஏமாந்துப் போகிறீர்கள். கண்டகச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கணவன்&மனைவிக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் வரும். கடந்த கால தவறுகள், குற்றங்கள், ஏச்சுப் பேச்சுகளையெல்லாம் இப்போது நினைவுக்கூர்ந்து புதிய பிரச்னைகளை உருவாக்காதீர்கள். மறப்போம், மன்னிப்போம் என்றிருப்பது நல்லது. இலவசமாக சில கெட்ட பழக்க வழக்கங்கள் உங்களை தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கூடாநட்பையெல்லாம் தவிர்ப்பது நல்லது. உங்களுடைய ராசிக்கு 3&ம் வீட்டில் குரு மறைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திட்டமிட்டு எதையும் செய்யப்பாருங்கள். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. விவாதங்களையும் தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது நீங்கள் ஆராய்வது நல்லது. வங்கிக் கடனை நினைத்தும் கலங்குவீர்கள். வெளியில் தைரியசாலியாக உங்களைக் காட்டிக் கொண்டாலும், உள்மனதில் ஒருவித பயம் பரவும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் வேண்டாம். புதிய பங்குதாரர்களையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள். இந்த வருடத்தில் நீங்கள் இருப்பதை வைத்து வியாபாரம் செய்வது நல்லது. வேலையாட்களால் ஏமாற்றங்களும், பிரச்னைகளும் வரக்கூடும். முன்பணம் யாருக்கும் தர வேண்டாம். கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் வரும். கேது 11&ல் நிற்பதால் சந்தை நிலவரத்தை அறிந்து, விளம்பர யுக்திகளை கையாண்டு ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன பழிகள் வந்து சேரும். கடினமாக உழைத்தும் அங்கீகாரம் இல்லையே என்று கலங்குவீர்கள். சக ஊழியர்களிடம் மேலதிகாரிகளைப் பற்றி எதுவும் தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டாம். மேலதிகாரியின் வற்பூர்த்தலின் பேரில் சில தவறுகளை செய்து விடாதீர்கள். இடமாற்றம் இருக்கும். சிறுசிறு அவமானங்களை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தை விட்டு பி

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading