NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வருட பலன் 2017 - கன்னி

கன்னி
ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக சாதிப்பவர்களே! 3-ம் வீட்டில் சனிபகவான் வலுவடைந்து நிற்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் மனோபலம் கூடும்.
முக்கிய முடிவுகளெல்லாம் தன்னிச்சையாக எடுப்பீர்கள். பெரிய பொறுப்புகளுக்கெல்லாம் தலைமை தாங்குமளவிற்கு உங்களுடைய ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடி வரும். பொது விழாக்கள், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். இழுபறியாக இருந்து வந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாழ்க்கைத் தரம் உயரும். நவீன வாகனம் வாங்குவீர்கள். சிலர் புதுத் தொழில் தொடங்கும் அமைப்பு உருவாகும். உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு நிற்கும் போது இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். தடைகளெல்லாம் நீங்கும். எதிர்பார்ப்புகள் நல்ல விதத்தில் முடிவடையும். வீடு, மனை வாங்குவீர்கள். சிலர் புது வீடு கட்டி கிரகப் பிரவேசமும் கோலாகலமாக செய்வீர்கள். வாகன வசதியும் பெருகும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். படிப்படியாக குடும்ப வருமானமும் உயரும். சிலர் உத்யோகத்தில் இருந்துக் கொண்டே பகுதி நேரமாக வியாபாரம் தொடங்க வாய்ப்பிருக்கிறது. பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். சொத்துகள் வாங்குவதன் பொருட்டு புது கடன் வாங்குவீர்கள். குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு திருமணம் முடியும். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். ஜீலை மாதம் முதல் குரு உங்கள் ராசிக்கு 12-வது வீட்டில் மறைவதால் அநாவசியச் செலவுகள் அதிகமாகும். எதிர்பார்த்த பணம் சற்றே தாமதமாக வந்து சேரும். பயணங்கள் உண்டு. உங்கள் ராசியிலேயே ராகு நிற்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தூக்கம் குறையும். கனவுத் தொல்லை அதிகமாகும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். சிலர் உங்களை தவறாக பேசுவதற்கும், செயல்படுவதற்கும் தூண்டிவிடுவார்கள். அப்படிப்பட்ட தூண்டுதல்களை நீங்கள் தவிர்ப்பது நல்லது. கூடாப்பழக்க வழக்கங்கள் உங்களை தொற்ற வாய்ப்பிருக்கிறது. லாகிரி, வஸ்துக்களை தவிர்க்கப்பாருங்கள். அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். அடிக்கடி சோப்பு, ஷாம்பு, பாடி ஸ்பேர, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் யோகாதிபதியான சுக்ரன் 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குழந்தை பாக்யமும் கிடைக்கும். மனைவிவழியில் சில உதவிகள் உண்டு. மனைவிக்கு வேலைக் கிடைக்கும். பிதுர்ராஜ்ய சொத்துகள் கைக்கு வந்து சேரும். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடிவடையும். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, கூடுதல் தளம் கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். சமையலறை, படுக்கை அறையை நவீனமாக்குவீர்கள். உயர்தர மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உங்களுக்கு அழகு, இளமைக் கூடும். எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 5-ம் வீட்டிலேயே செவ்வாய் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உங்களுடைய ஆலோசனைகளை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அவர்களின் புதிய முயற்சிகளெல்லாம் வெற்றியடையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டில் நிரந்தர குடியிருப்பு உரிமை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் ராசிக்கு 8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தவிர்க்க முடியாத செலவுகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். அடிக்கடி விவாதங்களும் வரும். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். பெருமைக்காக செலவுகளை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள்.இந்தாண்டு முழுக்க கேது 7-ல் நீடிப்பதால் மனைவியுடன் சந்தேகத்தால் பிரச்னைகள் வெடிக்கும். அவருக்கு மாதவிடாய்க் கோளாறு வந்துப் போகும். மனைவிவழி உறவினர்களுடனும் நிதானமாக பேசுவது, பழகுவது நல்லது. சூரியன் சாதகமாக இருப்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive