Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வருட பலன் 2017 - கடகம்

கடகம்
இனப்பற்றும், மொழிப்பற்றும் உள்ளவர்களே! உங்களுடைய ராசிக்கு 3&ம் வீட்டிலேயே இந்தாண்டு முழுக்க ராகு தொடர்வதால் தைரியம் பிறக்கும்.
பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். தோல்விமனப்பான்மை நீங்கும். உங்களைப் பற்றிய அவதூறுப் பேச்சுகளும் விலகும். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சகோதரனின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். அரசு பதவிகள் கிடைக்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். உங்களுடைய ராசிக்கு 7&ம் வீட்டில் செவ்வாய், சுக்ரன், புதன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் பொது அறிவு, மொழி அறிவுத் திறனையெல்லாம் வளர்த்துக் கொள்வீர்கள். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். கணவன்&மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. திருமணத் தடை நீங்கும். பிள்ளை பாக்யம் கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சூரியன் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். போட்டி, விவாதங்களில் வெற்றி கிட்டும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசாங்க விஷயங்கள் சுலபமாக முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உங்களுடைய ராசியிலேயே குருபகவான் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கொஞ்சம் வேலைச்சுமையும், படபடப்பும் இருந்துக் கொண்டேயிருக்கும். இரண்டு, மூன்று முறை முயன்று சில காரியங்களை முடிக்க வேண்டி வரும். தலைச்சுற்றல், வயிற்று வலி, வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வரும். பெரிய நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் சில நேரங்களில் தென்படும். ஆனால் மருத்துவ பரிசோதனை செய்துப் பார்க்கும் போது பெரிய ஆபத்து இல்லை என்பதை உணருவீர்கள். இருந்தாலும் நீங்கள் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். பண விஷயத்தில் கொஞ்சம் கறாராக இருங்கள். சமய, சந்தர்ப்ப, சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொண்டு சிலர் உங்களை ஏமாற்ற முனைவார்கள். உறவினர், நண்பர்களும் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்றிருப்பார்கள். ஆனால் ஜீலை மாதம் முதல் உங்கள் ராசியை விட்டு குரு விலகுவதால் ஆரோக்யம், அழகுக் கூடும். நோய் பற்றிய பயம் விலகும். செப்டம்பர் மாதம் முதல் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன்&மனைவி ஒன்று சேருவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். வழக்குகள் சாதகமாகும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வாகனம் வாங்கும் அமைப்பு உண்டாகும். சிலர் நல்ல காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் சொந்த வீடு வாங்கும் அமைப்பும் உண்டாகும். சனிபகவான் உங்கள் ராசிக்கு 5&ம் வீட்டில் சனிபகவான் நிற்கும் போது இந்த 2015ம் ஆண்டு பிறப்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். தாய்வழி உறவினர்களுடன் சின்ன சின்ன மோதல்கள் வரும். பிள்ளைகளிடம் அளவாகப் பேசுங்கள். உங்களுடைய பழங்கதைகளையெல்லாம் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஜென்ரேஷன் கேப் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தூக்கம் குறையும். குலதெய்வக் கோவிலுக்கு மறவாமல் சென்று வாருங்கள். இந்தாண்டு முழுக்க கேது 9&ம் வீட்டில் நீடிப்பதால் தந்தையாருடன் பிணக்குகள் வரும். அவரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். வருடத்தின் முற்பகுதியில் செலவுகள் அடுத்தடுத்து வரும். திடீர் பயணங்களும் அதிகரிக்கும். பிற்பகுதியில் ஓரளவு சேமிப்பீர்கள். வீடு, மனை வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிட்டும். வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். புது ஏஜென்சி கையெழுத்தாகும். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். வருடத்தின் முற்பகுதியில் லாபம் மந்தமாக இருந்தாலும், பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். ஏப்ரல், மே மாதங்களில் கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தள்ளிப் போன வாய்ப்புகளும் கூடி வரும். உத்யோகத்தில் ஜனவரி, பிப்ரவரி அலைச்சலும், சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்களும் நிகழும். ஏப்ரல், மே மாதங்களில் உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். வருடத்தின் பிற்பகுதியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிகாரியின் மனசு மாறும். சக ஊழியர்களால் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும். மாணவ&மாணவிகளே! டி.வி. பார்த்துக் கொண்டேயி

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading