Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

தமிழில் 25 க்கு 24 மதிப்பெண் அரியானா மாணவர்கள் ’வாங்கினார்களா’ ?

தபால் துறை தேர்வில் வெளிமாநிலத்தவர் தமிழில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

 அதை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்’ என மதுரையில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
மதுரை மாநகராட்சி வளாகத்தில், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் காலை, மாலையில் படித்து வருகின்றனர். 
நேற்று இவர்கள் கலெக்டர் வீரராகவ ராவிடம், தபால்துறை தேர்வை ரத்து செய்ய மனு கொடுத்தனர்.
மாணவர் மதன்ராஜ் கூறியதாவது
தபால்காரர், மெயில் கார்டு பணியிடங்களுக்கு தேர்வு கடந்த ஆண்டு டிச., 11ல் நடந்தது. தேர்வு முடிவுகள் மார்ச் 14ல் வெளியாகின. 
அரியானா, மகாராஷ்டிரா மாணவர்கள் மட்டும் சென்னை, மதுரை உட்பட அனைத்து கோட்டங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 300 பணியிடங்களில் 50 சதவீதத்திற்கு மேல் அரியானா மாணவர்கள் மட்டுமே முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 
இவர்கள், தமிழ் பகுதியில் 25க்கு 24 மதிப்பெண் பெற்றது, தேர்வின் வெளிப்படைத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.இந்த விபரத்தை தபால்துறை இணையதளத்தில் பார்த்து அறிந்தோம்; தற்போது, அதை முடக்கி வைத்துள்ளனர். 
போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும். சி.பி.ஐ., விசாரணை நடத்தி உண்மை நிலைமையை கண்டறிய வேண்டும். இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading