Total Pageviews

கோர்ட்டிற்குள் ஜீன்ஸ், டி-சர்ட் கூடாது?

ஜீன்ஸ் , டி- சர்ட் அணிந்து மும்பை ஐகோர்ட்டிற்கு செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோர்ட்டில் ஜீன்ஸ், டி-சர்ட் அணியலாமா, கூடாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஐகோர்ட்டில் நடந்து வரும் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி மஞ்சுளா மற்றும் ஜி.எஸ்.குல்கர்னி அமர்வு விசாரித்தது. அந்த செய்தியை சேரிக்க வந்த பத்திரிக்கையாளர் ஒருவர் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து வந்திருந்தார். அந்த பத்திரிக்கையாளரை நீதிபதி மஞ்சுளா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பத்திரிக்கையாளர்கள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்ததிற்கு கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளதால் இனி கோர்ட்டில் ஜீன்ஸ், டி-சர்ட் அணிய தடை இருக்கிறதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive