NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி.,யா? இனி பேராசிரியர் வேலை கிடைக்காது

         'தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தவர்களை, கல்லுாரி பேராசிரியர்களாக நியமிக்க முடியாது' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துஉள்ளது. 

பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு, முதுநிலை கல்வியுடன், பிஎச்.டி., என்ற, ஆராய்ச்சி படிப்பு பட்டம் அல்லது, 'நெட், செட்' என்ற இரண்டு தேர்வுகளில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பல இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், நெட், செட் முடிக்காதோர் மற்றும் பிஎச்.டி., பட்டம் பெறாதோர், ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளனர். அவர்களை பணி நீக்கம் செய்யும்படி, யு.ஜி.சி., ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இந்நிலையில், சில கல்லுாரிகள், தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தோரை, குறைந்த சம்பளத்தில் பேராசிரியர் பணிக்கு அமர்த்தியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து, யு.ஜி.சி., புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், 'கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ, பிஎச்.டி., படித்து பட்டம் பெற்றவர்கள், 'ரெகுலர்' என்ற வகையில் சேர்க்கப்படுவர். 
'ஆனால், தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தோருக்கு, ரெகுலர் சான்றிதழ் கிடைக்காது. எனவே, அவர்களை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், பேராசிரியர்களாக நியமிப்பதை ஏற்க முடியாது' என, தெரிவித்துள்ளது.




1 Comments:

  1. Sir please update the lecture TRB Zoology 2016
    question paper and key answer.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive